• புதியவை

    [இலுமினாட்டி 32]கார்ல் மார்க்ஸ் (Karl Marx) இலுமிணாட்டியா - பாகம் 3

    அடுத்த ஆதாரமாக சொல்லப்படுவது மார்க்சின் The Communist Manifesto. Brussels இருந்த மாசானிக் குழுவின் (சாத்தானிய வழிபாடு செய்யும் குழு) தலைவர் Ragon, 1843 ஜூலை 5-ல் கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோவிற்கு உரிய வரைவு அறிக்கையை தயார் செய்து பெல்ஜியத்திலிருக்கும் தலைமைக்கு (Supreme Conseil de Belgique) அனுப்பியதாக சொல்லப்படுகிறது. தலைமை Ragon-னின் திட்டத்தை ஏற்றுக்கொண்டது. அது தொடங்கி இந்த புத்தகத்தை எழுத்து வடிவில் கொண்டுவருவதற்கு முயற்ச்சிகள் நடந்துவந்திருக்கிறது.
    இந்த நிலையில் Brussels இருக்கும் lodge Le Socialiste மாசானிக் குழுவில் மார்க்ஸ் உறுப்பினராக சேருகிறார். 




    இது நடந்தது 1845 நவம்பர் 17-ல் என்று சொல்லப்படுகிறது. மார்க்சின் திறமை வெகு சீக்கிரத்திலேயே புரிந்துக்கொள்ளப்பட கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டைவை பதிப்பிக்கும் வேலை அவரிடம் கொடுக்கப்படுகிறது. Hess-ன் பத்திரிக்கையில் அவர் ஆசிரியராக இருந்ததும் ஒரு காரணம்.
    மார்க்ஸ் 1848-ல் The Communist Manifesto-வை மாசானிக் குழுவின் சார்பாக வெளியிட்டதாக சொல்லப்படுகிறது. இது மாத்திரம் அல்ல மார்க்சும் ஏங்கல்சும் freemasonary-யின் 31st degree உறுப்பினர்களாகவும் இருந்ததாக அந்த ஆதாரங்கள் சொல்கின்றன. 

    (Freemasonary போன்ற இரகசிய சாத்தானிய வழிபாட்டு குழுக்களைப் பற்றி வரலாற்று தோற்றங்கள் குறித்த தகவல்களை அறிந்துகொள்ள என்னுடைய மின்னூல் ‘இலுமினாட்டி உலக தீமைகளின் ஊற்றுகண்?’ படிக்கலாம்).
    மார்க்ஸ் மற்றும் ஏங்கல்சின் சாத்தானிய வழிபாடு இரகசிய குழுக்களின் தொடர்பு இத்துடன் நிற்கவில்லை. இருவரும் 1847 வாக்கில் இலுமினாட்டிகளின் மற்றொரு இரகசிய கிளைக் குழுவான The League of Just Men-லும் உறுப்பினர்களாக இணைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த குழுவின் முக்கிய புள்ளியாக செயல்பட்டவர் Jakob Venedey. இந்த குழு 1836-ல் பாரிசில் நிறுவப்பட்டது. இதை நிறுவியவர்கள் தங்களை புரட்சிகர யூத சோசலிஸ்டுகள் என்று அறிவித்துக்கொண்டார்கள். இந்த குழு தொடக்கத்திலிருந்தே ஐரோப்பிய அரசாங்கங்களை கவிழ்க்கும் வேலைகளில் ஈடுபட்டதாக உதாரணங்கள் காட்டப்படுகிறது.
    இத்தகைய முயற்ச்சிகள் தோல்வியில் முடிந்த காரணத்தால்தான் இலுமினாட்டி தலைமையும் The League of Just Men குழுவும் மிக வலுவான கருத்தியில் பின் புலத்தை தேடியிருக்கிறார்கள். அந்த கருத்தியலை கண் மூடித்தனமாக பின்பற்றும் பெரும் கூட்டமும் வேண்டும் அதே சமயத்தில் அது சட்ட விரோதமான கூட்டமாகவும் இருக்க கூடாது என்கிற அவர்களின் வேண்டுகோளைத்தான் மார்க்கசு தன்னுடைய கம்யூனிசமாக வளர்த்தெடுத்தார் என்று சொல்லப்படுகிறது. முன்பே சோசலிசத்தை தங்களுடைய சுயநலத்திற்கு அடிப்படையாக கொண்டிருந்தவர்களின் கண்களில் பட்டது பாட்டாளி வர்கம்.
    இலுமினாட்டிகளின் மேலே நாம் பார்த்த அனைத்து விதமான Terms&Conditions-களுக்கும் சரிபட்டு வரக் கூடியவர்களாக கண்களில் அகப்பட்டவர்கள் பாட்டாளிகள். அவர்களை குறிவைத்தே மார்க்சு இலுமினாட்டிகளால் கேட்டுக்கொள்ளப்பட்டு பிறகு தோன்றியதே கம்யூனிசம் என்றும் ஆதாரங்களை காட்டுகின்றன இலுமினாட்டிக் குறித்த புத்தகங்கள். மார்க்சின் வழிகாட்டி Moses Hess இதற்கு முதல் கட்டமாக முன்வைத்த யோசனை The League of Just Men குழுவையே முதல் கம்யூனிஸ்ட் கட்சியாக (Communist Party) மாற்றிவிடுவது என்பது. அதுவும் நடந்தது 1847 நவம்பரில்.                                        
    அடுத்த தொடரிலும்......
    நன்றி - நவீன அலக்சண்டர்

    No comments:

    Post a Comment

    Total Pageviews