• புதியவை

  11 சாத்தானிய சட்டங்கள் The Eleven Satanic Rules by Anton Szandor LaVey

  வாழ்க உறவே!
  சாத்தான் என்ற உடன் உங்க கற்பனை குதிரையை ஓட விடாதிங்க; கொஞ்சம் கட்டி போடுங்க  Anton Szandor LaVey

  Satanic Church  என்பது Anton Szandor LaVey உருவாக்கிய ஒரு மதம்; அமெரிக்காவில் அரசின் அனுமதியோடே இது இயங்கி வருகிறது; நாம் நினைப்பது போல இந்த மதத்தில் இருப்போர் எல்லாம் சாத்தானுக்கு நாம் வைத்திருக்கும் வரையறைகளோடு நோக்குவதில்லை; இவர்கள் சாத்தானை ஒரு ஆள் என்று சொல்வதே இல்லை; இது ஒரு அடையாளம் மட்டுமே.

  மந்திர தந்திரம் எல்லாம் இங்கே சாதாரணமாக நடக்கும் விடயங்கள்.

  11 சாத்தானிய சட்டங்கள்


  1. உன்னிடம் யாரும் கேட்காமல் கருத்தோ அறிவுரையோ கூறாதே.
  2. உன்னுடைய பிரச்சனைகளை அடுத்தவரிடம் சொல்லாதே; அவர் அதை கேட்க விரும்பிகிறார் என்பது உறுதியாக தெரியாத வரை.
  3. அடுத்தவரின் வீட்டில் இருக்கும் போது அவருக்கு மதிப்பு அளி; அல்லது அங்கே போகாதே.
  4. உனது வீட்டிற்கு வந்த விருந்தாளி உன்னையே வெறுப்பேற்றினால், அவரை கொடூரமாக நடத்து; இரக்கம் காட்டாதே.
  5. ஒருவருடன் காமத்தோடு பழகாதே; அவரிடம் இருந்து அழைப்பு வராவிடில்.
  6. ஒன்று  மற்றவர்களுக்கு தொந்தரவாக இருந்து, அதிலிருந்து தன்னை விடுவிக்குமாறு ஒருவர் உன்னிடம் கெஞ்சாதவரை, உனக்கு உரிமை இல்லாதவற்றை எடுக்காதே.
  7. மந்திரத்திரத்தை பயன்படுத்தி நீ உனது ஆசைகளை அடைந்திருந்தால் அதன் சக்தியை ஒத்துக்கொள்; அவ்வாறு நீ மந்திரத்தின் சக்தியை ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பெற்ற அனைத்தையும் இழப்பாய்.
  8. உனக்கு தொடர்பு இல்லாத ஒரு விடயத்தை குறித்து குற்றம் சாட்டாதே.
  9. சிறு குழந்தைகளுக்கு தீங்கு செய்யாதே.
  10. உன்னை தாக்கியதை திடுப்பி தாக்கவும், உணவுக்காகவும் அன்றி எந்த விலங்கையும் கொல்லாதே.
  11. திறந்த வெளியில் நடக்கும் போது யாரையும் தொந்தரவு செய்யாதே; யாராவது உன்னை தொந்தரவு செய்தால் அவரிடம் சொல்லி பார்; கேட்கவில்லையா அழித்துவிடு.
  - Anton Szandor LaVey

  சாத்தானிய சட்டங்கள் இதோடு கொடுமையா இருக்கும் என எதிர் பார்த்தீங்களா ? ஆனா உண்மையில் அப்படி இல்லை.

  மூலம் : http://www.churchofsatan.com/eleven-rules-of-earth.php

  நன்றி
  - யூதா அகரன்

  தொடர்புடைய பதிவுகள்

  5 comments:

  1. Inserting bio chip to humans started at america, 03.08.2017 morning 7.30 sun tv news showed the same

   ReplyDelete
   Replies
   1. இரண்டும் என்ன சம்பந்தம்

    Delete
  2. பல சமய சிந்தனையை போதிக்கும் இடம் சாத்தானின் இடம்.....?

   ReplyDelete
  3. பல சமய சிந்தனையை போதிக்கும் இடம் சாத்தானின் இடம்.....?

   ReplyDelete

  Total Pageviews