• புதியவை

    தமிழர்கள் இந்துக்கள் இல்லை

    (தமிழர்கள் இந்துக்கள் இல்லை, இந்துக்களாக ஆக்கப்பட்டனர் என்பதே உண்மை என்ற கருத்தோடு ஆரம்பித்தது...)




    நண்பன் : என்ன இப்படி சொல்லிட்டே. நீயும் இந்து தானே?

    நான் : 😅 அந்த அடையாளம் எனக்கானது இல்லைன்னு நான் உணர்ந்து எப்போதோ தூக்கியெறிந்து விட்டேன்.

    நண்பன் : அடேய், இந்து என்பதே நமது பெருமை.

    நான் : இந்து என்ற வார்த்தை எப்படி, யாரால், எதற்காக வந்ததுன்னு தெரியுமா? #இந்து என்றால் என்னன்னே தெரியாத மக்கள் மத்தியிலும் அது எப்படி திணிக்கப்பட்டதுன்னு தெரியுமா?

    நண்பன் : தெரியாதே, சொல்லு..

    நான் : "தெரியாதே" இது தான் சிக்கலே. தேடிப்பார் தெரியும். பலரின் #அறியாமை தான் சிலரின் ஆதாயம்.

    நண்பன் : #தமிழர்கள் இந்து இல்லைனா, அப்போ நம்முடைய மதம் தான் என்ன?

    நான் : உயிர் வாழ #மதம் மிக முக்கியம் என்பது போல அல்லவா இருக்கு நீ சொல்லுறது? அது சரி, முதலில் தமிழன் எப்போது மதம் என்ற அடையாளத்தோடு இருந்திருக்கிறான்? எல்லாமே பின்னாட்களில் வந்தவை.

    நண்பன் : சரி தான். அப்படினா சைவம், வைணவம் போன்றவை எல்லாம் தமிழரின் மதம் என்கிறார்களே, அது?

    நான் : அவை யாவும் தமிழர்கள் #பின்பற்றிய மதங்கள் தான், இல்லைன்னு சொல்லல. ஆனால் இவை ஒரு சிலரால் தோற்றுவிக்கப்பட்டு, அவர்களாலும் ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவினராலும் பின்பற்றி வந்த தனித்தனி பிரிவுகளே தவிர, ஒட்டுமொத்த தமிழர்களுக்கான அடையாளம் ஆகாது. இவற்றை பெருந்தெய்வ வழிபாடு என்று சொல்லுவார்கள். அதாவது இந்த தெய்வங்கள் பெரும்பாலும் பெருங்கோயிலுக்கு உள்ளே இருப்பவை. இந்த கோயிலுக்குள் #வழிபாடு மட்டுமல்ல, மற்ற பல விடயங்களும் இருந்துள்ளது, இரகசியமாக்கப்பட்டும் விட்டது. இதைப்பற்றியும் தேடிப்பார்.

    நண்பன் : அப்படினா தமிழன் எந்த மதமும் இல்லாத நாத்திகவாதிகளா?

    நான் : #நாத்திகவாதி என்றால் உடனே நீ எங்க போய் முடிப்பேன்னு தெரியும், அது பற்றி இங்கு பேச வேண்டாம்ன்னு நினைக்கிறேன். 😜

    நண்பன் : பிறகு எது தான் தமிழரின் #வழிபாட்டுமுறை?

    நான் : இப்போ கேட்டியே, இது தான் சரியான முறை. அதாவது தமிழர்கள் காலங்காலமாக செய்து வந்தது #நடுகல் அல்லது #முன்னோர் வழிபாடு. விளங்கும்படி சொல்லணும்னா #குலதெய்வவழிபாடு. அதை தான் நீங்கள் #சிறுதெய்வவழிபாடு-ன்னு சிறுமைப்படுத்தினீர்கள். பெருங்கோயிலுக்கு சென்று வழிப்பட்டு வந்தால் தான் பக்தி போலவும் தமிழர்கள் நாங்கள் குலதெய்வ கோயிலில் செய்வது மூடநம்பிக்கை போலவும் சித்தரித்தீர்கள். ஆனால் நீங்களே "முருகன் மயில் மேல் அமர்ந்து பறந்தான்" என்றாலும் "அரக்கன் பூமியையே சுருட்டி கடலின் அடியில் ஒளிந்துகொண்டான்" என்றாலும் நம்புவீர்கள். இது மட்டும் என்ன அறிவியல்பூர்வமான நம்பிக்கையா? இன்னும் சொல்லபோனால் தமிழர்களின் குலதெய்வ வழிபாடு தான் இயற்கையுடன் தொடர்புடையது. குல தெய்வங்கள் பெருங்கோயிலில் இருக்கும் தெய்வங்களைப் போல் இல்லாமல், மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவையும் கூட. இந்த தெய்வங்கள் சாதாரண மக்களைப் போலவே காட்சித்தரும்; மக்கள் சாப்பிடும் அசைவ உணவை ஏற்கும்; மக்களோடு வாழும் எளியவர்களால் தான் பூசையும் செய்யப்படும். தமிழ் மக்களின் வாழ்வியலோடு கலந்தது தான் இந்த வழிபாட்டு முறை. ஆனால், பெருங்கோயில்களில் நடப்பது நேரெதிரானது.

    நண்பன் : எம்மாடி! ஏற்றுகொள்கிறேன். சரி, குலதெய்வ வழிபாடு எந்த அடிப்படையில் செய்யப்படுவது?

    நான் : குலதெய்வ வழிபாடு என்பது குலம் காத்த முன்னோர்களை வழிபடுவது. வீரமரணம் அடைந்த வீரர்களுக்காக இடப்பட்ட நடுகல்லை வழிபடுவது. சங்ககாலத்தில் இருந்து ஆதாரம் வேண்டுமா, அதுவும் இருக்கு. #மாங்குடிகிழார் என்ற சங்ககால புலவர் தான் இதைப்பற்றி சரியாக பாடியும் வைத்திருக்கிறார். #கடவுள்இலவே-ன்னு ஒரு பாடல், கேள்விப்பட்டு இருக்கியா? "ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக் கல்லே பரவின் அல்லது நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே" - அப்படின்னு வரும். அதாவது பகைவர்களுடனான போரில் அவர்களைத் தடுத்து யானையையும் கொன்று வீழ்ந்தவர்களின் நடுகல்லை வழிபடுவோமே தவிர, நெல்லைத் தூவி கோயிலில் இருக்கும் சிலையை அல்ல என்று பொருள். இன்னும் சொல்லபோனால், ஆதியில் தமிழர்கள் #சிலைகள் ஏதுமின்றி தான் தங்கள் முன்னோர்களை வணங்கி வந்தனர். அது தான் #முருகு அல்லது அணங்கு வழிபாட்டு முறை. வெறும் #வேல் அல்லது சூலம் போன்ற ஆயுதங்களை மட்டுமே வைத்து வழிப்பட்டனர். பின்னர் வந்தது தான் குலதெய்வ கோயில்களில் புடைப்புச் சிற்பங்களும் சிலைகளும். இதுவும் நடுகல்லின் நீட்சி தான். அதனால் தமிழர்களுக்கு பெருங்கோயிலுக்கு செல்லும் வழக்கமும் பெருந்தெய்வ உருவங்களை வழிபடும் தேவையும் இருந்ததில்லை.

    நண்பன் : சிறப்பு, நானும் கேள்விப்பட்டு இருக்கேன். ஆனால் இதை முறையற்ற வழிபாடுன்னு தவிர்க்க சொல்கிறார்களே, அது ஏன்?

    நான் : இப்போ தான் முக்கிய பாயிண்ட்டுக்கே வந்திருக்க. அதைச் சொல்வது யார்? ஏன் அப்படி சொல்கிறார்கள்? என்பதை தேடு. பல உண்மைகள் தெரியவரும்.

    நண்பன் : அப்போ ஏதோ ஒரு சூட்சமம் இருக்குன்னு சொல்லுற?

    நான் : இயா கண்டிப்பாக, தேடிப்பார். ரொம்ப காலமாக நீ நம்பிக்கொண்டு இருந்த சில விடயங்கள் வேறு கோணத்தில் உனக்கு புலப்படும். அதை நீ எப்படி புரிந்து கொள்கிறாய் என்பது உன் கையில் தான் உள்ளது. எந்த மதமோ சமயமோ தவறுன்னும் அதை நீ பின்பற்ற வேண்டாம்னும் சொல்லல. அது உன் தனிப்பட்ட விருப்பம். ஆனால் அவை ஏன் நம் #வழிவழியாக செய்து வந்த வழிபாட்டை தவறுன்னு சொல்கிறது என்பதை மட்டும் உணர்ந்துகொண்டால் போதும். பிறகு உனக்கே புரியவரும். 👍

    நண்பன் : ஆனால், பெருங்கோயிலில் இருக்கும் தெய்வங்கள் பலவும் நம் தமிழர் வாழ்வியலில் கலந்தது போல சித்தரிக்கிறார்களே?

    நான் : அங்கே தான் இருக்கு இன்னொரு சூட்சமம். அதாவது ஒரு புது விடயத்தை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்றால் அந்த மக்கள் பின்பற்றும் பண்பாட்டோடு அது சம்பந்தப்பட்டிருப்பது அவசியம். அப்போ தான் அந்த விடயம் எளிதில் மக்களிடம் சென்றடையும். இங்கே பல கதைகள் நம் குலதெய்வத்திடம் இருந்து திரிக்கப்பட்டவை தான். மற்றவை நம் வழிபாட்டு முறையோடு பல புராணக்கதைகள் சொல்லி சேர்க்கப்பட்டது.

    நண்பன் : கொஞ்சம் விளக்கமாக சொல்லு.. 😬

    நான் : அ-வில் இருந்து ஃ வரை நானே சொல்லிடட்டா? எனக்கு தெரிந்த விடயங்களை எல்லாம் சொன்னால், ஓஒ-ன்னு சொல்லிட்டு ஆராயாமல் அப்படியே கடந்து சென்றிடுவாய். ஆனால் நீயா #தேடலில் ஈடுப்பட்டால் உனக்கு இதோடு சேர்த்து இன்னும் பல தகவல்கள் கிடைக்கும். இவ்வளவு குறிப்புகள் கொடுத்திருக்கேன்ல, இதை வைத்து தேடிப்பார்.

    நண்பன் : ஓகே, அப்போ முடிவா குலதெய்வ வழிபாடு தான் தமிழருடைய வழிபாடுன்னு சொல்லுற?

    நான் : என்னைப் பொறுத்தவரையில், #ஆம்! ‘குலதெய்வத்தை வணங்கினால் கோடி நன்மை உண்டு’ & ‘குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்காதே’ போன்ற பழமொழிகள் நம் #முன்னோர்கள் சொல்லி வைத்தது குலதெய்வ வழிபாட்டின் அவசியத்தை உணர்த்த தான். நான் இதுவரை சொன்னது எல்லாம் அடிப்படை புரிதலுக்கு தான். இதை முதலில் நன்கு புரிந்துகொள். பிறகு தான் இன்னும் ஆழமாக போக வேண்டும். நானும் தெரிந்துக்கொள்ள இதில் இன்னும் பல விடயங்கள் இருக்கு. #தேடுவோம்! தேடாமல், உனக்கு சொல்லப்பட்டது மட்டும் தான் உண்மைன்னு நம்பிக்கிட்டு இருந்தா ஆரம்பத்தில் சொன்னியே அந்த #பெருமை, அந்த மாதிரி பெருமையிலே தான் நீ மூழ்கி கிடப்பாய். வேறு கோணத்தில் பார்க்க ஆரம்பித்தால் தான் பல விடயங்கள் உனக்கு புரியும்.

    நண்பன் : கண்டிப்பாக.. நன்றி 😊
    நான் : 😎✌️

    - பிரவீன் சுகுமாறன்

    தொடர்புடைய பதிவுகள்

    No comments:

    Post a Comment

    Total Pageviews