தமிழ் நண்பர்களே,
இது ஓர் ஆட்டையபோட்ட பதிவு . எனது கருத்தை கீழே பதிவிட்டுள்ளேன். தொடர்ந்து வாசியுங்கள்.
பூமியின் அச்சிலிருந்து 33° அளவெடுத்து ஒரு இணைக்கோடு வரைந்து அதில் குறுக்கிடும் இடங்களையும் அந்த இடங்கள் சார்ந்து வரலாற்றில் நடந்த நிகழ்வுகளையும் ஆராய்ந்து பார்ப்பீர்களானால் ஆச்சரியத்தில் உறைந்து போவீர்கள். பூமியின் 33° இணைக்கோட்டுப் பகுதி அத்தனை முக்கியத்துவமுள்ளது. எண் கணித நிபுணர்களிடம் 33 ஆம் எண்ணின் சிறப்பு என்ன என்று கேட்பீர்களானால் அவர்கள் பல்வேறு காரியங்களை அடுக்கிக் கொண்டே போவார்கள். அமானுஷ்ய சடங்குகள் நிறைந்த ப்ரீமேசன்ஸ் இயக்கத்தின் மிக உன்னத நிலையாக 33-டிகிரி போற்றப்படுகிறது. இந்த நிலையை எட்டியவர்களை 33° ஃப்ரீமேசன் என்றழைப்பார்கள். இவர்களது பழமை வாய்ந்த போனிக்ஸ் கோவிலும் சரியாக பூமியின் 33° இணைக்கோட்டில்தான் வருகிறது.
உலகின் ஆகப்பெரிய அமானுஷ்யங்களை சுமந்து கொண்டிருக்கும் பெர்முடா முக்கோணமும், அள்ள அள்ளக் குறையாத மர்மங்களை உள்ளடக்கிய கிரேட் பிரமிடும் இதே இணைகோட்டில்தான் இருக்கிறது. செழிப்பான, நாகரீகமிக்க தேசமாயிருந்து முற்றிலும் கடலில் மூழ்கி அழிந்துபோனதாக நம்பப்படும் அட்லாண்டிஸ் தீவும், விவிலியத்தில் கடவுளுக்கு எதிரான சைத்தானின் நகரமாக சொல்லப்படும் பாபிலோனும் இந்த 33° இணைக்கோட்டுப் பகுதியில்தான் இருந்தது.
சரி எல்லாம் இருந்துட்டுப் போகட்டும் அதனால் என்ன என்கிறீர்களா? 33-ஆம் எண் சைத்தானுக்கு உகந்த எண்களிலேயே மிக முக்கியமான எண்ணாகும். எனவே தனக்கு மிகவும் உகந்த அந்த இடத்தில் தனக்கு இரத்த பலிகள் கொடுக்கப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று சைத்தான் விரும்புவதாக சொல்லப்படுகிறது. எனவே உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் சிலர் வேண்டுமென்றே சுயலாபத்துக்காக அந்த இடத்தில் விபத்துகளையும், யுத்தங்களையும் நிகழ்த்தி சைத்தானுக்கு நரபலிகளை கொடுப்பதாக சதித்திட்ட கோட்பாட்டாளர்கள் (Conspiracy Theorists) குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் இவர்கள் குற்றச்சாட்டுக்கு அதிகாரபூர்வ ஆதாரங்கள் ஏதுமில்லை.
ஆதாரங்கள் ஏதுமில்லாவிட்டாலும் சம்பவங்களின் புள்ளிகளை இணைத்துப் பார்க்கும்போது நமக்கும் பயத்தில் முதுகுத்தண்டு சில்லிடவே செய்கிறது. இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு வீசப்பட்ட ஹிரோஷிமா நாகசாகி இந்த 33° இணைக்கோட்டில்தான் இருக்கிறது. ஒரு நாட்டின்மீது தாக்குதல் நடத்தினால் அந்த நாட்டின் தலைநகரையோ அல்லது இராணுவ தளங்களையோதானே தகர்க்க வேண்டும். எந்த முக்கியத்துவமும் இல்லாத ஹிரோஷிமா நாகசாகிமீது குண்டு வீசப்பட்டதேன், அது சைத்தானை திருப்திப்படுத்தத்தான் என்று சதித்திட்ட கோட்பாட்டாளர்கள் வாதிடுகிறார்கள்.
வட ஆப்பிரிக்காவில் இனக்கலவரங்கள் நடைபெற்று அனுதினமும் மக்கள் இரத்தம் சிந்தி மரிக்கும் பகுதிகள் இந்த இணைக்கோட்டில்தான் வருகிறது. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜான். F.கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது சரியாக 33 டிகிரி அளவுள்ள இடத்தில்தான். உலகம் முழுவதும் இந்த33° இணைக்கோட்டுப் பகுதியில் 600 கோடி மக்கள் வசிக்கிறார்கள். எப்போதும் துப்பாக்கி சத்தம் கேட்கும் பகுதிகளான ஈராக், இஸ்ரேல், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீர் போன்ற பகுதிகள் இந்த இணைக்கோட்டில்தான் வருகின்றன.
1947 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ரோஸ்வெல் என்ற நகரத்தில் வேற்றுகிரகவாசிகளின் விண்கலம் நொறுங்கி அதில் பயணம் செய்த ஏலியன்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இடமும் இதே இணைக்கோட்டில்தான் இருக்கிறது. விவிலியத்தில் இறைவனுக்கும் சைத்தானுக்கும் கடைசி யுத்தமாக அர்மெகதோன் நடைபெறப்போகும் இடம் என்று நம்பப்படும் மகிடோ மலையும் இந்த 33 டிகிரி இணைக்கோட்டில்தான் இருக்கிறது. இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தது தனது 33 வது வயதில்தான், சைத்தான் சொர்க்கத்தில் இருந்த இறைதூதர்களில் மூன்றில் ஒரு பங்கை தன் பக்கம் இழுத்துக் கொண்டதாக விவிலியம் சொல்லுகிறது. அது சரியாக 33.33 சதவிகிதமாகும்.
சரி இதிலிருந்து இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க 33-ஆம் நம்பர் வீட்டிலோ தெருவிலோ இருக்கக்கூடாது என்கிறீர்களா என்று கேட்டால்…நான் ஒண்ணுஞ்சொல்லல சாமி! நம்ம ஊரில் எப்படி இரவு நேரங்களில் பேய்க்கதைகள் பேசி ஒரு த்ரில் அடைகிறோமோ அதுபோல மேலைநாடுகளில் இப்படி conspiracy theory-க்களைப் படித்து, பேசி த்ரில் அடைவாங்க. சொன்ன விஷயம் த்ரில்லா இருந்துச்சா இல்லையா? அத்தோட விடுங்க..
ஆக்கம்: விஜய் (www.oodakam.in)
சகோ. விஜய் அருமையாக எழுதியுருக்கிறார். கடைசியில் காமடி வேற பண்ணிருக்காரு. இவர் எழுதியிருப்பது உண்மை.
இந்த 33 என்ற எண் இலுமிணாட்டிகளின் கடவுளுக்கு பிடித்த எண். பிரிமேசன் என்ற அமைப்பை பற்றி ஒரு பதிவில் சொல்லியிருக்கேன் நியாபகம் இருக்கா. அதில் அதிகபச்ச உயர்நிலை 33° தான். இதை பற்றி இன்னும் நிறைய இருக்கு அப்புறம் பார்க்கலாம்.
நன்றி.
Too much of Ads, wont come here again
ReplyDeleteSorry.............
Delete33' from which point of earth to which point..
ReplyDelete