• புதியவை

  கன்னிக்கு பிறந்தவர்கள் (Born of virgin)

  வாழ்க உறவே !  பல நாகரிகங்களில் இருந்து தாமரையும் ; தாமரை பிறப்பு கோட்பாட்டையும் பார்த்து வந்தோம் அதன் தொடர்ச்சியே, இந்த பதிவும் கன்னிக்கு பிறந்தவர்கள்...

  கன்னிக்கு பிறப்பது என்பது ஒவ்வொரு மதங்களிலும் ஒரு முக்கிய விடயமாகவே காணப்படுகிறது; கன்னிக்கு பிறப்பது தூய்மையானதாகவும் சிறப்பானதாகவுமே கருதப்படுகிறது; கலவியினால் பிறந்தவர் உலகை காக்க முடியாது என்னும் பதியப்பட்ட எண்ணமே இதற்கு காரணம்; சுமேரு தொடங்கி இந்து மதம் வரை இது தொடர்கிறது; மதங்கள் அனைத்தும் ஒரே மக்களால் தான் உருவாக்கப்பட்டது என கூறிக்கொண்டே வருவது நினைவிருக்கும் என நம்புகிறேன்.

  பின்வரும் கடவுளர்கள் கன்னி பிறந்தவர்களாக காட்டப்படவே அவற்றை பின்பற்றும் மக்கள் விரும்புகின்றனர்; அதுவே அவர்களின் நம்பிக்கையாகவும் உள்ளது.

  சுமேரு / பாபிலோனியா

  Ea வுக்கு பிறந்த Marduk. இவரை முருகனோடு ஒப்பிட்டு சொல்வதுண்டு.
  புத்தர்

  புத்தரின் தாய் மாயா அதிசயமாக புத்தரை பெற்றெடுத்தாராம்; இவரும் கலவி இன்றி பிறந்தவர் தான் பல கதைகளின்படி
  சைனா

  Hou Ji , வேளாண்மையின் கடவுளான இவர் கலவி இன்றி தனது தாய்க்கு பிறந்தவர்.


  Laozi , மெய்யியல் தாவோயிசத்தை தொடங்கியவர்; வானிலிருந்து விழுந்த 7 நட்சத்திரத்தினால் கருவாகி பிறந்தவர்.

  Emperor Taizu of Liao, இவரது தாய் வானிலிருந்த சூரியன் தனது கருபையில் விழுந்தாக கனவு கண்டார்; பின் தன் கன்னி தாயிக்கு பிறந்தார்.

  கிறித்தவம்
  இயேசு, தனது தாய் கன்னி மரியாவுக்கு கருவாகி வியத்தகு முறையில் பிறந்தார்

  எகிப்து
  எகிப்தியரின் கதைகளின் தந்தை இல்லாமல் பிறந்தவர்களாக பலர் காட்டப்படுகின்றனர். 
  ISIS தனது கணவர் ஓசிரிஸ் இறந்த பிறகு ஹோரசை பெற்றெடுக்கிறாள்.


  Alexander the Great ம் Augustus ம் கூட கன்னிக்கு பிறந்தவர்களாக சில ஆய்வாளர்களால் சொல்லப்படுகிறது. அதுவும் பாம்பு கடவுளால் அவர்களின் தாய் கருவுற்று பிறந்தனறாம்.

  நமது நிலத்தில்
  கிருட்டினன், தேவகிக்கு கலவி இன்றி பிறந்தார்

  கர்ணன் , குந்திக்கு சூரியனின் அருளால் பிறந்தார்
  ராமன், கவ்சல்யாவுக்கு கலவி இன்றி பிறந்தார்.
  முருகன் , மேலும் பலர்


  யூதம்
  Melchizedek என்னும் குரு கன்னிக்கு பிறந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் பலர்...

  இப்படி உலகின் பல பகுதிகளிலும் கன்னிக்கு பிறந்தவர்கள் என பலரை சொல்கிறார்கள் .

  கன்னிக்கு குழந்தை பிறக்குமா ? இந்த கன்னிக்கு பிறத்தலுக்குபின் உள்ள சூட்சமம் தான் என்ன ? (அடுத்த பதிவில்)

  இவர்களில் பலர் சூரியனை அடையாளப்படுத்தும் கடவுளர் என்பதை மறக்க வேண்டாம்.

  நீங்கள் உங்களுக்கு தெரிந்த கன்னிக்கு பிறந்தவர்களை பட்டியலிடுங்கள்.... இது எதை சூட்சகமாக குறிக்கிறது என்ற உங்கள் பார்வையையும் கூறுங்கள்

  நன்றி.
  - யூதா அகரன்


  தொடர்புடைய பதிவுகள்

  2 comments:

  1. snake god is refered to nagar( first tamil people to speak with tongue ), thats why shiva has snake around neck, krishna has snake around him

   ReplyDelete
  2. நீங்கள் செய்த அனைத்திர்கும் மனமார்ந்த நன்றிகள்.

   ReplyDelete

  Total Pageviews