• புதியவை

  பிரம்மனும் தாமரையும் (Brahma on lotus)

  வாழ்க உறவே!
  தாமரை என்பது எல்லா மதங்களிலும் பிரபஞ்சத்தின் தோற்றுவாயாக, மறுபிறப்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

  பிரம்மனை பற்றி வேதங்களில் எதுவும் இருப்பது போல தெரியவில்லை; பிரம்மா என்ற கடவுள் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவர் என்றே தோன்றுகிறது.

  பிரம்மனுக்கு என தனித்த வழிபாடுகள் இல்லை; குமரி முதல் இமயம் வரை ஒன்னு இரண்டு கோவில்கள் தான் காணப்படுகின்றன; அவையும் 5 நூற்றாண்டுக்கு முன்பு இல்லை.

  தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் கண்டியூர் என்னும் இடத்தில் ஒரு பிரம்மன் கோயில் அமைந்துள்ளது.


  பிரம்மன் கருத்தியல் தமிழ்நாட்டுக்கு வரும் முன் கம்போடியா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற இடங்களில் காணப்படுகிறது; அங்கே பிரம்மனுக்கு பல கோவில்கள் உள்ளன;  பிரம்மனை போல இந்திரனும் அங்கிருந்து வந்தது தான்; இவை மருத நிலத்தை உருவாக்கிய சூரிய வழிபாட்டாரோடு இங்கு வந்துள்ளது.

  பெருமேடு வடிவ பிரம்மன் கோவில், இந்தோனேசியா
  பிரம்மன் கோவில், இந்தோனேசியா

  தாமரையில் பிரம்மன், கம்போடியா  கடந்த பதிவில் 
  எகிப்தில் தாமரை குறியீடு 
  பற்றி பார்த்தோம்; அதில் தாமரையில் தான் பிரபஞ்சத்தை உருவாக்கிய சூரியன் பிறந்ததாக உருவகப்படுத்தப்பட்டிருந்ததை பார்த்தோம்.


  தாமரையில் உதித்த பிரம்மன்

  பிரம்மன் , இந்திரன் போன்றவை ஒரு ஆளை குறிக்காமல், அவை பதவிகளாகவே கூறப்படுகின்றன.

  தேவி மஹாத்மியம் என்கிற தேவி புராணத்தில் ஒரு சம்பவம் விளக்கப்படுகிறது.

  ஒரு யுகத்தில் மகாப்பிரளயம் தோன்றி அனைத்து உலகங்களையும் நீரில் ஆழ்த்தியது. அதற்கு முன்பு தோற்றுவிக்கப்பட்ட எந்த  தாவர, விலங்கினங்களும் காணப்படவில்லை. பார்க்குமிடமெல்லாம் தண்ணீர். அந்த பிரளய வெள்ளத்தில் ஒரு சிறு ஆலிலை மிதந்து வந்தது. அதன் மேல் விஷ்ணு ஒரு குழந்தை வடிவில் மிதந்துகொண்டிருந்தார்.


  தேவி புராணத்தின் ஏழாவது காண்டத்தில், பிரம்மன் தோன்றிய வரலாறு மேற் கண்டவாறு விளக்கப்படுகிறது.

  விஷ்ணுவின் நாபியிலிருந்து ஒரு தாமரைத் தண்டு வளர ஆரம்பித்தது. பிரளய வெள்ளத்தின் பரப்புகளைத் தாண்டி, அது நீண்டு வளர்ந்தது. அதன் நுனியில் ஒரு பிரமாண்டமான தாமரை மலர் மலர்ந்தது. அதனுள் இருந்து பிரம்மதேவன் தோன்றினார்.
  தாமரையில் பிறந்த பிரம்மன்


  தாமரையிலிருந்து பிறந்த பிரம்மன் மீண்டும் அனைத்தையும் படைத்தார்; இதை தான் நாம் எகிப்திய புராணத்திலும் பார்த்தோம்.

  எல்லா மதங்களும் ஒரே குழுவினரால் தோற்றுவிக்கப்பட்டது என்பதை இது மீண்டும் நிறுவுகிறது.

  அடுத்த பதிவில் புத்தரிடம் போவோம்.

  நன்றி
  -யூதா அகரன்

  தொடர்புடைய பதிவுகள்

  1 comment:

  Total Pageviews