• புதியவை

  தாமரை அல்லது யோனி பிறப்பு ? (Lotus or vagina birth)

  வாழ்க உறவே ! தாமரை சின்னங்களையும் , தாமரை பிறப்பையும் பற்றி பழைய பதிவுகளில் பார்த்துள்ளோம்; தற்பொழுது தாமரை எதை குறிக்கிறது என்பதை பார்க்கவிருக்கிறோம்  தாமரை பல்வேறு இடங்களில் யோனியை தான் குறிக்கிறது.

  இனி நான் சொல்ல இருக்கும் கருத்துக்களை புரிய பழைய பதிவுகளை படித்திருப்பது அவசியமாகிறது.

  எகிப்தில் தாமரை

  பிரம்மனும் தாமரையும்
  தாமரை

  உலகின் எங்கும் தாமரை தூய்மையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது; தூய மறுபிறப்பிற்கு அடையாளமாக காட்டப்படுகிறது; உலகின் உயிர்களில் தோற்றுவாயாக புராணங்களில் தாமரை காணப்படுகிறது.


  தாமரை மலர் யோனியைத்தான் அதாவது பெண் உறுப்பை தான் குறிக்கிறது ; அதுவே உயிர்களின் தோற்றுவாய். 


  The Scientific Basis of Hinduism  என்ற நூலில் தாமரை எவ்வாறு யோனியை அடையாளப்படுத்துகிறது, என பாகம் பாகமாக விளக்கப்பட்டுள்ளது.


  தாமரைக்கு புண்டரீகம் என்ற ஒரு பெயர் உள்ளது என்பது இதை உறுதிப்படுத்த உதவும்.

  நாம் எல்லாரும் யோனிக்கு பிறந்தவர்கள் தானே இதில் என்ன புதிதாக உள்ளது என சிலர் மனம் போயிருக்கும் ?

  தற்பொழுது கடந்த பதிவை நினைவுக்கு கொண்டுவாங்க
  கன்னிக்கு பிறந்தவர்கள்

  நாம் கலவியினால் பிறந்தவர்கள்; அதாவது ஆண் பெண் இணைவினால் பிறந்தவர்கள்; ஆனால் இந்த கன்னிக்கு பிறந்தவர்கள் கலவி இன்றி பிறந்தவர்கள்; இதை தான் தாமரை பிறப்பு என்கின்றனர்.


  விந்து இன்றி
  ஒரு பெண் விந்துவை ஏற்காமல் பிறப்பிக்கூடியது எது ?
  ஒரு கன்னி விந்தினை ஏற்காமல் பிறப்பிக்ககூடியது பூப்புக்குருதியாக தான் இருக்கு முடியும்.
  கன்னிக்கு பிறந்த ஆதவன்கள்
  எகிப்தில் தாமரை குறியீடு பதிவிலும் கன்னிக்கு பிறந்தவர்கள் பதிவிலும் தெளிவாக பார்க்கமுடிந்தது என்னவெனில், கன்னிக்கு பிறந்தவர்களும் தாமரையில் பிறந்தவர்களும் சூரியனை குறிக்கும் கடவுளர்கள்.  தாந்திரிக மற்றும் ஓக மரபுகளில் பெண்ணின் பூப்புக்குருதி சூரியனை குறிக்கிறது; சந்தேகம் எனில் கேட்டு பாருங்க.
  புண்டரீகம்
  வைணவத்தில் இடப்படும் நாமத்திற்கும் புண்டரீகம் என்று பெயர். இந்த நாமத்தின் வடிவமே யோனியையும் அதன் மையத்திலிருக்கும் கோடு வடியும் பூப்புக்குருதியையும் குறிக்கிறது.

  புண்டரீகம்

  தாமரை என்னும் புண்டரீகமும் நம் பகுதியில் அரச குடும்பத்தால் உருவாக்கப்பட்ட மதத்தின் அடையாளமாகவே உள்ளது; அதன் மேலும் நீங்கள் பூப்புக்குருதியை காண முடியும்.  பூப்புக்குருதி என்பது ஒரு மாந்திரீக பொருளும் கூட ; இது இம்மண்ணின் பூர்வகுடிகளை அடக்கிவைக்கு அந்த அரச குடும்பத்தால் பயன்படுத்தப்படும் ஒன்று; தமிழகத்தை நோக்கி படையெடுத்த பல்வேறு மதங்களில் இந்த தாமரையை காண முடியும்; பின் நாட்களில் இம்மதங்கள் எல்லாம் இந்து என்னும் பொது பெயரில் இணைக்கப்பட்டது.

  மண்ணின் மைந்தரின் குலதெய்வ வழிபாட்டை ஒழிக்க இது பல்வேறு வடிவங்களில் மீண்டும் மீண்டும் அரச குடும்பத்தால் அனுப்பப்பட்டது.

  பூப்புக்குருதி எவ்வாறு நமக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றி வரும் பதிவுகளில் பார்ப்போம்

  சூரிய வழிபாடு என்பதில் இந்த பூப்புக்குருதி மாந்திரிகமும் அடக்கம்; இந்த பூப்புக்குருதியே சூரியகடவுள்களாக உருவகப்படுத்தபட்டுள்ளனர்.


  சாதாரண மக்களுக்கு வெறும் அடையாளங்கள் மட்டுமே காட்டப்படும்; அரச குடும்பமும் அதன் ஆட்களுமே உண்மையான சூரியவழிபாட்டை செய்வர்.

  நன்றி.
  - யூதா அகரன்

  தொடர்புடைய பதிவுகள்  2 comments:

  Total Pageviews