• புதியவை

  [மருத்துவம் 3 ]பாரம்பரிய உடலியல் - உறுப்புகள்

  (இது ஒரு தொடர் பதிவு)

  இந்த பதிவில் பாரம்பரிய உடலியலின் அடிப்படையில் உறுப்புகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.,

  இந்திய பாரம்பரிய மருத்துவம் மற்றும் உடலியல், உடலில் பனிரெண்டு உறுப்புகள் இருப்பதாக வகை செய்கிறது.,  அவை:
  i) நுரையீரல்(Lung)
  ii) பெருங்குடல்(Large Intestine)
  iii) இரைப்பையை(Stomach)
  iv) மண்ணீரல்(Spleen)
  v) இருதயம்(Heart)
  vi) சிறு குடல்(Small Intestine)
  vii) சிறுநீரகப் பை(Urinary Bladder)
  viii) சிறுநீரகம்(Kidney)
  ix) இருதய மேலுறை(Pericardium)
  x) மூவெப்ப மண்டலம்(Tripple Warmer)
  xii) பித்தப்பை(Gall Bladder)
  xii) கல்லீரல்(Liver)

  இந்த பனிரெண்டும் உடலின் உள்உறுப்புகள் என்று வகை செய்யப்படுகிறது., மேலும் இந்திய பாரம்பரிய மருத்துவம் மற்றும் உடலியலின் அடிப்படையில் மூளை(Brain) என்பது ஒரு உறுப்பாக வகை செய்யப்படவில்லை., அது எலும்பு மஜ்சைகளின் தொகுப்பாகவே அறியப்படுகிறது.,

  மூளை வெறும் கடத்தும் பணியை மட்டுமே செய்வதாகவும், மகிழ்ச்சி, கோபம் போன்ற உணர்வுகளை உண்டாக்கி அவற்றை கையாள்வது உறுப்புகள் தான் என்றும் இந்திய பாரம்பரிய உளவியல் சொல்கிறது.,

  இன்றய நவீன (மேற்கத்திய)மருத்துவம் உள்ளுறுப்புகளை ஆராய பல இயந்திர தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது., ஆனால் இந்த தொழில் நுட்பம் எதுவும் இல்லாத காலத்தில் உள்ளுறுப்பின் நிலையை எப்படி பரிசோதித்திருப்பார்கள்?!

  பாரம்பரிய உடலியல், ஒவ்வொரு உள்ளுறுப்பிற்கும் ஒரு வெளிப்புற உணர்வுறுப்பு இருப்பதாகச் சொல்கிறது., அந்த வெளிப்புற உறுப்புகளில் பிரதிபலிக்கும் மிகை, குறைகளைக் கொண்டு உள்ளுருப்பின் மிகை, குறைகள் கணக்கிடப்படும்.,

  இனி ஒவ்வொரு உறுப்பை பற்றியும் அவை உடலில் என்ன என்ன வேலையெல்லாம் செய்கிறது என்பதை பற்றியும் விரிவாக பார்க்கலாம்.,

  1. நுரையீரல்(Lung):

  இயக்கத் தன்மையில் காற்றின் அம்சத்தை தனதாக்கிக் கொண்ட உறுப்பு., இது உடலில் சுவாசத்தை கையாள்வது நமக்கு தெரியும், ஆனால் இதனுடைய வேலை அதோடு நின்றுவிடவில்லை., உடலின் தொடு உணர்வு, தோல் ரோம பராமரிப்பு போன்ற பணிகளையும் நுரையீரல் தான் கவனித்து கொள்கிறது., மேலும் அழுகை என்ற உணர்வு நுரையீரலால் தான் தூண்டப்படுகிறது.,

  பலமான நுரையீரலை கொண்டவர் தேவையான இடங்களில் மட்டுமே அழுவார்., பலவீனமான நுரையீரலை கொண்டவர்கள் மட்டுமே எப்போதும் அழுதுகொண்டே இருப்பார்கள்., மிகைபலம் கொண்ட நுரையீரலுக்கு சொந்தகாரர் எப்போதுமே அழமாட்டார்.,

  இதன் வெளிப்புற உணர்வுறுப்பாக மூக்கு செயல்படுவதால் நுரையீரல் தனது எந்த பிரச்சினையும் மூக்கின் மூலமாகவே வெளிபடுத்துகிறது.,

  2. பெருங்குடல்:

  இருப்புத் தன்மையில் காற்றின் அம்சத்தை பெற்றிருக்கும் உறுப்பாக பெருங்குடல் அறியப்படுகிறது., நவீன மருத்துவம் பெருங்குடல் உணவின் திரவ சத்துக்களை உறிஞ்சும் பணியை மட்டுமே செய்வதாகச் சொல்கிறது., என்றாலும் இதன் பணி அதோடு நின்றுவிடவில்லை, தோல்(சரீரம்) பராமரிப்பில் இது முக்கிய பங்கு வகிக்கிறது., மேலும் மூளைக்கு தேவையான சத்துக்களை உணவில் இருந்து பிரித்து அதை மூளைக்கு அனுப்பும் பணியையும் செய்கிறது.,

  3. இரைப்பையை:
  இது இருப்பின் தன்மையில் மண்ணின் அம்சத்தை பெற்ற உறுப்பாக வகை செய்யப்படுகிறது., நவீன மருத்துவம் இதை முதல் கட்ட ஜீரண உறுப்பு என்று சொன்னாலும், பாரம்பரிய மருத்துவம் இதை இரண்டாம் கட்ட ஜீரண உறுப்பாகவே வரையறை செய்கிறது., (ஜீரணம் வாயில் இருந்தே தொடங்கிவிடுவதால் வாயே முதல் கட்ட ஜீரண உறுப்பாகும்)

  இரைப்பையின் பிரச்சினைகள் பெரும்பாலும் முதலில் வாயில் தான் தெரியும்., வாய் இதன் வெளிப்புற உணர்வுறுப்பாக செயல்படுகிறது., வாய் துர்நாற்றம் இரைப்பையில் கழிவு தேங்குவதால் ஏற்படுகிறது.,

  கவலை என்னும் உணர்வை கையாளும் உறுப்பாக இது அறியப்படுகிறது., எனவே தான் நாம் கவலையாக இருக்கும் நேரங்களில் நம்மால் பசியை உணரவோ, சாப்பிடவோ முடிவதில்லை.,

  4. மண்ணீரல்:
  இயக்கத் தன்மையில் மண்ணின் அம்சத்தை பெற்ற உறுப்பு மண்ணீரல்.,

  உடலில் இரத்த உற்பத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குதல் போன்ற பணிகளையும், அதோடு உடலின் மையவிசையை கட்டுபடுத்தி ஒவ்வொரு உறுப்பையும் அதற்கான இடத்தில் நிலைபடுத்தும் பணியையும் இது செய்கிறது., குடலிறக்கம் போன்ற பிரச்சினைகள் மண்ணீரலின் பலகீனத்தால் தான் ஏற்படுகிறது.,

  மண்ணீரல் பலம் கொண்டவர்கள் மனக் கட்டுப்பாடுடனும், வைராக்கியத்துடனும் இருப்பார்கள்.,

  உதடு இதன் வெளிப்புற உணர்வுறுப்பாகும்., உதடுகளில் வெடிப்பு ஏற்படுவது மண்ணீரலின் அதிகப்படியான உஷ்ணத்தால் ஏற்படுவதாகும்.,

  5. இருதயம்:

  இயக்கத்தின் தன்மையில் நெருப்பின் அம்சத்தை பெற்றிக்கும் உறுப்பாக இது அறியப்படுகிறது., இருதயம் மூளையின் செயல்பாடுகளை தீர்மானிக்கும் உறுப்புகளில் ஒன்றாக இருக்கிறது., மேலும் உடலில் ஒவ்வொரு செல்லுக்கும் தேவையானதை இரத்தத்தின் மூலம் கடத்தும் கடத்தியாகவும் இது செயல்படுகிறது.,

  இருதயம் மகிழ்ச்சி என்ற உணர்வை கையாள்கிறது., பலமான இருதயம் கொண்டவர்கள் எளிதில் அனைவரிடமும் அன்பு பாராட்டுபவர்களாக இருப்பர்.,

  இருதயத்தின் வெளிப்புற உணர்வுறுப்பு நாக்கு., இருதயத்தில் பாதிப்பு ஏற்படும் போது அது மூளையின் செயல்பாட்டையும் பாதிக்கும், ஞாபக மறதி, மன அமைதியின்மை, தூக்கமின்மை போன்ற மூளையோடு தொடர்புடைய பிரச்சினைகள் இருதய பலகீனத்தால் ஏற்படுகின்றன.,

  6. சிறுகுடல்:
  இருப்புத் தன்மையில் நெருப்பின் அம்சத்தை பெற்றிக்கும் சிறுகுடல் இரைப்பையில் ஜீரணிக்கப்பட்ட உணவுகளில் உள்ள சத்துக்களை உறிஞ்சும் பணியை செய்கிறது., நவீன மருத்துவம் சிறுகுடலே முதல் உறிஞ்சும் பணியை செய்வதாகச் சொல்கிறது., ஆனால் நாக்கே மூதல் உறிஞ்சும் பணியை செய்கிறது.,

  7. சிறுநீரகப்பை:
  இருப்புத் தன்மையில் நீரின் அம்சத்தை பெற்ற உறுப்பு., நவீன மருத்துவம் இது சிறுநீரை சேமித்து வைக்கும் பணியை மட்டுமே செய்வதாக சொல்லகிறது., ஆனால் இது சிறுகுடலில் இருந்து அனுப்பப்படும் நீர் கழிவுகளில் இருக்கும் கடைசிகட்ட சத்துக்களை உறிஞ்சும் பணியையும் செய்கிறது.,

  8. சிறுநீரகம்:
  இயக்கத் தன்மையில் நீரின் அம்சத்தை பெற்றிருக்கும் உறுப்பாக வகை செய்யப்படுகிறது., இது உடலின் இரண்டு ராஜ உறுப்புகளில் ஒன்றாக அறியப்படுகிறது.,

  நவீன மருத்துவம், இரத்தத்தில் உள்ள தேவையில்லாத உப்பு மற்றும் சக்கரையை பிரிக்கும் பணியை மட்டுமே செய்வதாகச் சொல்கிறது., என்றாலும், சிறுநீரகம், பெற்றோர்களிடமிருந்து பெரப்படும் மூலாதாரத்தை சேமிக்கும் உறுப்பாகவும், மூளையை கட்டுபடுத்தும் உறுப்புகளில் ஒன்றாகவும் செயல்படுகிறது.,

  இது பயம் என்ற உணர்வை கையாள்கிறது., பலகீனமான சிறுநீரகம் உடையவர்கள் எப்போதும் அச்சமான மனநிலையிலேயே இருப்பார்கள்.,

  இதன் வெளிப்புற உணர்வுறுப்பு காது., இரண்டு காதுகளில் ஒன்று சிறிதாக இருந்தால், அவருக்கு இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று சிறிதாக இருக்கும்.,

  9. இருதய மேலுறை:
  இயக்கத் தன்மையில் நெருப்பின் அம்சத்தை பெற்றிக்கும் உறுப்பாக இது அறியப்படுகிறது., நவீன மருத்துவம் இதை ஒரு தனி உறுப்பல்ல என்றும், இருதயத்தோடு சேர்ந்தே இருக்கும் ஒன்று என்றும் சொல்கிறது., ஆனால் இருதயத்தின் பணிக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதாலும், இது இருதயத்தை பாதுகாக்கும் பிரதான பணியை செய்வதாலும் இது தனி உறுப்பாக கணக்கிடப்படுகிறது.,

  10. மூவெப்ப மண்டலம்:
  இருப்புத் தன்மையில் நெருப்பின் அம்சத்தை கொண்டது., உண்மையில் இது ஒரு உறுப்பில்லை என்ற போதிலும், இதன் பணியின் அவசியத்தின் அடிப்படையில் இதற்கு உறுப்பிற்கு வழங்கப்படும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.,

  இது உடலின் வெப்ப நிலையை கட்டுபடுத்தி கையாளும் பணியை செய்கிறது., சுவாசத்திற்கு தேவையான வெப்பம், ஜீரணத்திற்கு தேவையான வெப்பம், கழிவு வெளியேற்றத்திற்கு தேவையான வெப்பம் என்று மூன்றாக பிரித்து இது வெப்பத்தின் மீது ஆளுமை செலுத்தி உடலின் சீரான இயக்கத்திற்கு வகை செய்யப்படுகிறது.,

  11. பித்தப்பை:
  இருப்புத் தன்மையில் ஆகாயத்தின் அம்சத்தை பெற்ற உறுப்பு., இது கல்லீரல் உற்பத்தி செய்யும் பித்த நீரை சேமித்து தேவைக்கு ஏற்றார் போல் சுரக்கும் பணியை செய்கிறது.,

  12. கல்லீரல்:
  இயக்கத் தன்மையில் ஆகாயத்தின் அம்சத்தை தனதாக்கிக் கொண்ட உறுப்பு.,  உடலின் முதன்மையான ராஜ உறுப்பு., ஆகாய அம்சம் ஆதலால் அதிகபடியான உயிர் தன்மை கொண்டு, உடலில் வெட்டினால் மீண்டும் வளரும் ஒரே உள்ளுறுப்பு என்ற தனித்துவத்தை கொண்ட உறுப்பு.,

  மனித மூளை மற்றும் சிந்தனை ஆகியவற்றை கட்டுப்படுத்தும் உறுப்பாக இது அறியப்படுகிறது.,

  இதன் வெளிப்புற உணர்வுறுப்பு கண்., இது கோபம் என்ற உணர்வை கையாள்கிறது.,  பலகீனமான கல்லீரலை கொண்டவர்கள் கடும் கோபக்காரர்களாக இருப்பர்.,

  தொடரும்....,

  - Dr. S.M.M

  No comments:

  Post a Comment

  Total Pageviews