• புதியவை

  [மருத்துவம் 6]பாரம்பரிய உடலியல் - மூன்று சுழற்சி

  (இது ஒரு தொடர் பதிவு)
  இந்திய பாரம்பரிய மருத்துவம் மற்றும் உடலியல், உடலின் சீரான செயல்பாட்டிற்கு காரணமான மூன்று சுழற்சிகளைப் பற்றி நமக்கு சொல்கிறது., இந்த மூன்று சுழற்சிகளே உடலில் ஏற்படும் நோய்களுக்கு காரணமாகவும், அதே நேரத்தில் அந்த நோய்களை குணமாக்குவதற்கான வழியாகவும் இருக்கிறது.,


  அவை:
  i) ஆக்கச் சுழற்சி(வாதச் சுழற்சி)
  ii) அழிவுச் சுழற்சி(பித்தச் சுழற்சி)
  iii) காக்கும் சுழற்சி(கபச் சுழற்சி)

  இந்த மூன்று சுழற்சிகளும் பஞ்சபூதத்தை அடிப்படையாக கொண்டு உடலை இயக்கிக் கொண்டிருக்கிறது.,

  இவை முக்குற்றம் என்றும் அறியப்படுகிறது., இவை நோய் ஏற்படுவதற்கு காரணமாய் இருப்பதால் பலர் இந்த குற்றம் என்ற வார்த்தை நோயை குறிப்பதாக கருதுகின்றனர்., ஆனால் இந்த குற்றம் என்ற வார்த்தை சுழற்சி என்ற அர்த்தத்தையே குறிக்கிறது.,

  i) ஆக்கச் சுழற்சி:
  பாரம்பரிய மருத்துவம் மற்றும் தத்துவவியலின் அடிப்படையில், வாதக் குற்றம் என்று அறியப்படும் இது காற்றின் அம்சத்தை பெற்று பிரம்ம தத்துவத்தின் படி ஆக்கும் பணியை செய்கிறது.,

  இந்திய மற்றும் சீன பாரம்பரிய தத்துவவியலின் அடிப்படையில், (சீனர்கள் ஆகாயத்தை மரம் என்றும் காற்றை உலோகம் என்றும் அழைக்கின்றனர்)

  மரம்(ஆகாயம்/உயிர்) ஒன்றோடொன்று உரசி நெருப்பை உண்டாக்குகிறது.,
  நெருப்பு சாம்பலாகி மண்ணை உண்டாக்குகிறது.,
  மண் தன்னுள் அழுத்தம் பெற்று உலோகத்தை(காற்றை) உண்டாக்குகிறது.,
  உலோகம் உருகி(காற்று அழுத்தப்பட்டு) நீரை உண்டாக்குகிறது.,
  நீர் மரத்தை(உயிரை) வளர்க்கிறது.,

  இவ்வாறாக ஒரு பூதம் மற்றொரு பூதத்தை உண்டாக்குகிறது.,


  ii) அழிவுச் சுழற்சி:
  பித்த குற்றம் என்று அறியப்படும் இது நெருப்பின் அம்சத்தை பெற்று சிவ தத்துவத்தின் படி அழிக்கும் பணியை செய்கிறது.,

  அதன்படி,
  மரம் மண்ணை அழிக்கும்.,
  மண் நீரை உறிஞ்சும்.,
  நீர் நெருப்பை அணைக்கும்.,
  நெருப்பு உலோகத்தை உருக்கும்.,
  உலோகம் மரத்தை வெட்டும்.,

  இவ்வாறாக ஒரு பூதம் மற்றொரு பூதத்தை அழிக்கிறது.,


  iii)காக்கும் சுழற்சி:
  கப குற்றம் என்று அறியப்படும் இது நீரின் அம்சத்தை பெற்று விஷ்ணு(மாயை) தத்துவத்தின் படி காக்கும் பணியை செய்கிறது., இது மாறுபட்ட உறுமாற்றும் சுழற்சி என்றும் அழைக்கப்படுகிறது.,

  அதன்படி.,
  மரம் அதிகமாகி காற்றை குறைக்கிறது(தடுக்கிறது).,
  காற்று அதிகமாகி நெருப்பை குறைக்கிறது.,
  நெருப்பு அதிகமாகி நீரை குறைக்கிறது(ஆவியாக்குகிறது).,
  நீர் அதிகமாகி நிலத்தை குறைக்கிறது.,
  நிலம் அதிகமாகி மரத்தை குறைக்கிறது.,

  இவ்வாறாக இது சமநிலையை ஏற்படுத்துகிறது.,

  இந்த பதிவில் முக்குற்றம் பற்றிய அடிப்படையை மட்டுமே பார்த்திருக்கிறோம்., அடுத்தடுத்த பதிவுகளில் ஒவ்வொரு குற்றத்தை பற்றியும், அது சார்ந்த அனைத்து விசயங்களைப் பற்றியும் விரிவாக பார்க்கலாம்.,
  - Dr.S.M.M.,

  No comments:

  Post a Comment

  Total Pageviews