• புதியவை

  [மருத்துவம் 10]கழிவு நீக்கம் - வெப்பக் கழிவுகள்

  உடலின் இயக்கத்திற்கு வெப்ப ஆற்றல் மிகவும் இன்றி அமையாததாக இருக்கிறது., உடல் ஒவ்வொரு உறுப்பிற்கும் தேவையான வெப்பத்தை பிரித்து கொடுக்கும்., அப்படி கொடுக்கப்பட்ட வெப்பம் முழுவதும் பயன்படுத்தப்படாமல் தேங்குவதை வெப்பத் தேக்கம் அல்லது வெப்பக் கழிவு என்கிறோம்.,  வெளியேற்றும் வழிமுறைகள்:

  i) மூழ்கிக் குளிப்பது:

  ஆறு அல்லது குளம் அல்லது ஏரி போன்றவற்றில் மூழ்கி குளிப்பது வெப்பக் கழிவுகளை வெளியேற்றுவதற்கான தலைசிறந்த வழியாகும்.,

  ஆனாலும் இன்றய சூழலில் ஆறு, ஏரிகளில் நீருக்கு பதிலாக சாக்கடை தான் தேங்குகிறது என்பதால் இதை நடைமுறை படுத்துவது சற்று சிரமமாகத் தான் இருக்கிறது.,

  ஆனாலும், இதற்கு ஒரு மாற்று வழி இருக்கிறது.,  ஒரு பெரிய அண்டாவில் அல்லது டப்பில் குளிர்ந்த நீரை நிரப்பி அதனுல் இறங்கி ஒரு 20 முதல் 30 நிமிடங்கள் வரை இருக்கலாம்., இதை வாரத்திற்கு ஒரு முறை செய்தால் கூட போதும்.,

  ii) கண் கழுவுதல்:

  தினமும் குளிக்கும் போது, பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, முகம் முழுவதும் அதாவது, நெற்றி, கண்ணம், கண், மூக்கு, வாய், நாடி ஆகிய அனைத்தும் தண்ணீருக்குள் இருக்கும் படி மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டு முகத்தை தண்ணீருக்குள் நுழைக்க வேண்டும்., கட்டாயம் காது தண்ணீருக்கு வெளியில் தான் இருக்க வேண்டும்.,  எவ்வளவு நேரம் மூச்சை பிடிக்க முடியுமோ அவ்வளவு நேரம் தண்ணீருக்குள் முகத்தை வைத்திருக்க வேண்டும்., பிறகு முகத்தை வெளியே எடுத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு பின் மீண்டும் மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டு அதுபோலவே மூழ்க வேண்டும்., இவ்வாறு 3 ல் இருந்து 5 தடவைகள் வரை செய்ய வேண்டும்., தண்ணீருக்குள் முகம் இருக்கும் பொழுது கட்டாயம் கண்களை நன்கு விரிய திறந்திறுக்க வேண்டும்.,


  iii) எண்ணைக் குளியல்:

  உடல் முழுக்க நல்லெண்ணெயை தேய்த்துக் கொண்டு 20 முதல் 40 நிமிடத்திற்கு பிறகு (கொதிக்க வைக்காத) சற்றே வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்., சூரிய உதயத்திற்கு முன் குளித்து விடுவது சிறப்பு.,

  ஆண்கள் மாதத்திற்கு ஒரு முறையும், பெண்கள் வாரத்திற்கு ஒரு முறையும் குளிக்கலாம்.,


  iv) நாட்டுச் சக்கரை நீர்:

  வாரத்தில் ஒரு நாள், தண்ணீரில் நாட்டுச் சக்கரையை உங்கள் நாவிற்கு இனிப்பு தெரியும் அளவிற்கு கலந்து., அந்த நாள் முழுக்க தண்ணீருக்கு பதில் அந்த நீரை குடிக்க வேண்டும்., தினமும் தண்ணீருக்கு பதிலாக நாட்டுச் சக்கரை நீரை பயன்படுத்தினால் இன்னும் சிறப்பு.,

  இது வெப்பக் கழிவுகளை வெளியேற்றி, உடல் சூட்டை தனித்து உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள உதவுகிறது.,


  v) ஆயில் புல்லிங்:

  சிறிதளவு நல்லெண்ணெயை எடுத்து வாயில் ஊற்றி நன்கு கொப்பளிக்க வேண்டும்., தொடர்ந்து கொப்பளிப்பதால் கீழ் தாடையில் வலி ஏற்படும் வரை கொப்பளித்துக் கொண்டே இருக்க வேண்டும்., பிறகு எண்ணையை துப்பிவிட வேண்டும்., இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.,

  இது கல்லீரலில் தேங்கும் கொழுப்புக் கழிவுகளையும், இருதயம், இரைப்பை, மண்ணீரல் ஆகிய உறுப்புகளில் தேங்கும் வெப்பக் கழிவுகளையும் வெளியேற்றுகிறது.,


  இந்த ஐந்தையும் தொடர்ந்து முறையாக செய்து வந்தால் உடலில் வெப்பக் கழிவுகள் தேங்காது., கண் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், தூக்கமின்மை போன்ற வெப்பத் தேக்கத்தினால் ஏற்படும் அனைத்து வித பிரச்சினைகளும் முழுவதுமாக சரியாகிவிடும்.,

  இது குறித்த மேலதிகத் தகவல்கள், சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களுக்கு...................,
  What'sApp - 8056362189

  தொடரும்....,
  -Dr.S.M.M.,

  No comments:

  Post a Comment

  Total Pageviews