• புதியவை

  உணர்வுகளை வியாபாரம் செய்யும் ஊடகங்கள்

  வாழ்க,  உறவுகளே..
  தற்பொழுது ஊடகங்களால் உணர்வுகள் கச்சிதமாக பயன்படுத்தப்படுகின்றன.


  விசய் தொலைக்காட்சி போன்றவை நமது குழந்தைகளின் உணர்வுகளில் விளையாடுகின்றன. அதை பணமாக்குகின்றன.

  Super Singer போன்ற பல போட்டி நிகழ்ச்சிகள் பல தொலைக்காட்சியால் நடத்தப்படுகின்றன. அது அவர்களின் வாழ்க்கைக்கு உதவுவதாகவும் அதனால் பயன் பெற்றுள்ளதாக எல்லாம் சொல்லப்படுகிறது.

  வெற்றி பெற்றவன் சரி,  தோற்கடிக்கப்பட்டவர்களின் நிலை என்ன? 

  இந்நிகழ்ச்சிகளில் அவர்கள் அழுவதை காட்டுகின்றன. அவர் இவர் அழுதார் என விளம்பரப்படுத்தப்பட்டு பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. அந்த குழுந்தை தானாக அழ வில்லை அழ வைத்துள்ளார்கள் பணத்திற்காக.


  இந்நிகழ்வுகள் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே போட்டி, பொறாமை,  தாழ்வு எண்ணம்,  ஊடக மோகம் என பல விரும்பத்தகாத பண்புகளை விதைக்கிறது .

  (போட்டியும் தேவையற்றது தான்)

  வெற்றிபெற்றவர்களும் சாமானியர்கள் இல்லை என நீங்க அறிந்திருப்பீர்கள், அதோடு அந்நிகழ்ச்சிகளில் நடத்தப்படும் பித்தலாட்டங்களும் நமக்கு தெரியாதவை அல்ல.
  இப்படிபட்ட இழிவான நிகழ்ச்சிகளை விலக்குங்கள்,  உங்கள் குழந்தையின் கண்களுக்கு காட்டாதீர்கள்.

  ஆடல்,  பாடலில் உங்கள் குழந்தைகளை வளத்தெடுக்க இது போன்ற நிகழ்ச்சிகள் பயன்படாது, பயன்படுத்தவும் செய்யாதீர்கள்.

  பொழுது போக்கு ஊடகங்களை போலவே, செய்தி ஊடகங்களும் நமது உணர்சிக்களை பாதிக்கும் , திசைத்திருப்பும் செய்திகளை வெளியிடுகின்றன. 

  தற்பொழுது பாக்கித்தான்-இந்தியா மோதலை மக்கள் மனநிலையினை உணர்வுப்பூர்வமாக செய்திகளை கூறி ஏற்படுத்தி , வளத்துவருகிறது ஊடகங்கள் ; இது நம்மை ஆளும் அரச குடும்பத்திற்கு சாதகமானதே .  நாம் எதிர்க்க வேண்டியது முதலில் இந்திய அரசையே. எல்லா அரசுகளும் ஒழிக்க படவேண்டியவையே...

  நன்றி.

  1 comment:

  1. உண்மை இந்த மாறி நிகழ்ச்சி செய்திலாம் பலவீனம் படுத்துவதற்கும், பிரித்து ஆளுவதற்கும் தான்

   ReplyDelete

  Total Pageviews