• புதியவை

    இந்திய தேசிய கீதம் - உண்மை என்ன?

    காட்சி: ஒரு பேரரசனின் முடிசூட்டு விழா
    இடம்: அவனுக்காகவே கட்டப்பட்ட புதுதில்லி நகரம்
    பாடப்பட்டவன்: ஐந்தாம் சார்சு மன்னன்
    பாடியவன்: இரவீந்திரநாத தாகூர்
    திணை: வாகைத் திணை
    அவையோர்கள்: பேரரசனுக்கு அடிபணிந்த சிற்றரசர்கள், பேரரசனின் இராணுவத் தளபதிகள் மற்றும் ஆளுநர்கள்.




    பாடல்:
    மக்களின் மனங்களை ஆளும் ஆதிநாயகனே உனக்கு வெற்றி உண்டாகட்டும்;
    பாரத நாட்டின் விதியைத் தீர்மானிப்பவனே ;
    நின் திருநாமம் பஞ்சாப், சிந்து, குசராட்டியம், மராட்டியம்,
    திராவிடம், உட்கலம் ( கலிங்கம் ) மற்றும் வங்கத்தில் ஒலிக்கின்றது;
    விந்தியம் மற்றும் இமயதில் பட்டு ,
    யமுனை,கங்கை மற்றும் இந்தியப்பெருங்கடலின் ஆர்ப்பரிக்கும் நீரலைகளில் அது எதிரோலிக்கின்றது;
    அவை நின் திருநாமத்தையே பாடுகின்றன; நின் ஆசீர்வாதத்தை அவை வேண்டுகின்றன;
    நின் வெற்றிக் கதைகளையே அவை நித்தமும் பாடிக்கொண்டிருக்கின்றன;
    மக்களுக்கு நன்மை கொடுப்பவனே உனக்கு வெற்றி உண்டாகட்டும்;
    பாரதத்தின் தலைவிதியைத் தீர்மானிப்பவனே உனக்கு வெற்றி உண்டாகட்டும்; வெற்றி உண்டாகட்டும்;வெற்றி வெற்றி வெற்றி மட்டுமே உண்டாகட்டும்.
    இதைப் பாடிய புலவனுக்கு அப்பேரரசன் பொற்கிழி பரிசளிக்கவில்லை,மாறாக உலகமே போற்றும் வண்ணம் இலக்கியத்துக்கான நோபல் பரிசு கொடுத்தான் !!
    இந்தப் பாடலைத்தான் இந்திய தேசிய கீதம் என்று நம்மை நம்பவைத்துள்ளனர் !!

    - சிவக்குமார் கோண்

    No comments:

    Post a Comment

    Total Pageviews