• புதியவை

  குண்டலினி (kundalini)

  உறவே வாழ்க
  இன்று குண்டலினி பற்றி பார்க்கலாம்

  குண்டலினியை வாசியோகம் என்றும் சொல்லுவாங்க. நமக்கு இந்த சொல் பழக்கம் இல்லை என்றாலும் இதை பற்றி நமக்கு முன்பே தெரியும். 15 ஆண்டுகளுக்கு முன்வு பொதிகையில் ஓடிய ஒரு தொடர் சக்திமான். நிச்சயமா எல்லாரும் அந்த காலத்தில ஆர்வமா பாத்திருப்போ.

  சக்திமான் தனது உடலில் உள்ள ஏழு சக்கரத்தையும் இயக்கியவுடன் அவருக்கு அரும் பெரும் சக்தி வரும். பறப்பார், ஓடுவார், தூக்குவார், மோதுவார் ,பார்ப்பார் , கேட்பார் ஆனால் நம்மை விட அதிக ஆற்றலோடு இவற்றை செய்வார்; அதற்கு இந்த குண்டலினி சக்தி தான் காரணம்.


  குண்டலினி
  நமது உடலில் ஏழு சக்கரங்கள் இருக்கு . மூலாதாரத்தில் இருக்கும் சக்தியை துரியத்துகு உயர்த்துவது தான் குண்டலினி; அதாவது மூலாதாரத்தில்ல தூங்குற பாம்ப தட்டி எழுப்பி படம் எடுத்து ஆட வைக்கனும்.


  33 படிநிலைகளை கடந்து உச்சத்தை அடையனும். முழுகெலும்பில் 33 இணைநரம்பு முடிச்சிகளில் ஏறி மண்டை ஓட்டில் உள்ளே புதையலை அடையனும்,  ஏதேன் தோட்டத்திலிருந்த அதே பாம்பு தான் இது; நமக்கு விழிப்புணர்வையும் ஞானத்தையும் ஆற்றலையும் கொடுக்கும். அந்த ஏதேன் தோட்டம் என்பது ஒரு உருவகம் மட்டுமே.

  மூன்றாம் கண்ணை திறப்பதே இந்நிகழ்வு...😁

  ஏதேன் தோட்டத்தின் மொத்த உருவகத்தையும் அடுத்த பதிவுல பாக்கலாம்

  நன்றி.

  No comments:

  Post a Comment

  Total Pageviews