• புதியவை

    நெஞ்சு பொறுக்குதில்லையே

    எனது தோழியின் பேச்சு போட்டிக்காக எனது உரை




    நெஞ்சு பொறுக்குதில்லையே 


    நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
    நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
    கஞ்சி குடிப்பதற்கிலார் -அதன்
    காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
    பஞ்சமோ பஞ்சமென்றே -நிதம்
    பரிதவித் தே உயிர் துடிதுடித்து
    துஞ்சி மடிகின்றாரே -இவர்
    துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே (நெஞ்சு)





    பாரதி பாடிய இக்கவி தற்பொழுதும் நமது நிலையை தெளிவாய் விளக்குகி நிற்கிறது;


    நமது நாடு சுதந்திர மடைந்து அரை நூற்றாண்டு கடந்தும் பட்டினி சாவும் விவசாயி தற்கொலையும் ஒழிந்தபாடில்லை. உண்மையை உரைத்திடின் சுதந்திரத்திற்கு பின்பே இவை அதிகரித்தன.


    பாரதி பாடுவதை போல், நாம் பஞ்சம் பஞ்சம் எங்கிறோமே தவிர, பிரச்சனை பிரச்சனை எங்கிறோமே தவிர அதன் காரணத்தை ஆராய்வதே இல்லை.


    நெஞ்சம் பொறுப்பதில்லையே என பாடி பாரதி சென்று விட்டார் ; அவருடைய கால பிரச்சனைகளை விட இக்கால தமிழ்நாட்டின் பிரச்சனைகள் சொல்ல முடியா அளவு பெரியவை.

    விவசாயிகள் தற்கொலை, பட்டினி சாவு ,அணுவுலை, அனல் மின்நிலையங்கள், மணல் கொள்ளை, நீர் கோள்ளை, மலை கொள்ளை, கல்வி கொள்ளை, கற்பணை கொள்ளை என கொள்ளைகள் தொடர்கினறன; இதற்கு உதவுவது நமது அரசும், அதிகாரிகளும் என்பதை என்னும் போதும் நெஞ்சம் பொறுக்குதில்லையே.

    ஒன்றை எதிர்த்து இளையோர் எழுந்து நின்று வென்றால் , எழுகிறது மற்றொன்று; அதையும் ஒழித்து போட்டால் பழையது புதிய பெயரில் தமிழகத்தின் மீது படை எடுக்கிறது; என் இளையோர் போராட்டத்திலேயே வாழ வேண்டியது தானா. இதற்கு எல்லாம் காரணம் எது ? நமது பாரதியின் அறிவுரை கேட்டு ஆராய தொடங்கினேன்.

    இதற்கு எல்லாம் ஒற்றை வார்த்தையில் என்னால் தீர்வு சொல்ல முடியும் அது 'தற்சார்பு வாழ்க்கை.' நாம் அவர்களின் வணிகத்தை தடை செய்தால் நாம் நமது வெற்றியை உறுதி செய்து கொள்ளலாம்,


    ஒரு வணிகனுடைய மனநிலை நமக்கு எப்பொழுதும் பிடிபடாது; ஏனெனில் நாம் பழங்குடிகளாய் யாருக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்து பழகியவர்கள். ஒரு வணிகன் தனது நலனுக்கு உங்கள் குழுந்தைகளை கூட கொலை செய்வான். அவனது மனநிலை அப்படிபட்டது.


    தடுப்பூசியின் கொடூரத்தை பற்றி பலர் பேசியும்; அவர்களால் மருத்துவ நிறுவங்ளின் பண பலத்திற்கு முன் பெரிதாய் எதுவும் செய்ய முடிவதில்லை. உங்களுக்கு உண்மையை சொல்லும் என நீங்கள் நம்பும் ஊடகங்கள் ஒரு வணிகனுடையதாக இருக்கும் போது அவனுடைய சதியை அவனே எப்படி காட்டிகொடுப்பான் என நாம் சிந்திக்க வேண்டும்; நமக்கு அவர்களின் பொருள்களை வியாபாரம் செய்யவும் , நம்மை உண்மை பிரச்சனைக்ளில் இருந்து திசை திருப்பவுமே  இவை பயன்படுத்தப்டுகின்றன.

    ஒரு வேலை உங்கள் அரசு உங்களுக்கு உதவும் என நீங்கள் நினைத்தீர்கள் எனில் நீங்கள் சிந்தனை குறைபாடு உடையவர் என தான் நான் கூறுவேன். உங்களின் வாழ்வை அழிக்க வரும் திட்டங்களை நீங்கள் எதித்து நிற்க்கும் போது, உங்களை தாக்க வருவதும், வணிகனுக்கு பாதுகாப்பு கொடுப்பதும், குப்பத்தை கொழுத்துவதும், போராடுவொர் மீது பழி போடுவதும், உங்கள் அரசு தான் என்பதை நீங்கள் மறந்து போகிறீர்கள்.


    உங்கள் அரசு உங்களை கொல்ல விருப்புகிறது என சொன்னால் நீங்கள் நம்ப மறுக்கலாம் ஆனால் அது தான் உண்மை. world trading organization எனற ஒரு கூட்டமைப்பு உலக வணிகர்களால் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அவர்கள் இது வரை பல முடிவுகளை எடுத்துள்ளனர்; அதில் ஒன்று, "நாம் விற்பதை வாங்க முடியாதா யாரும் வாழ தேவை இல்லை" . அதாவது ஏழைகள் அழித்து விடுவது; இதற்காக அவர்கள் போட்ட திட்டம் எது எனில் அரசுகள் மாணியங்கள் கொடுப்பதையும் ,  நியாயவிலை கடைகள் வழியாக குறைந்து விலையில் பொருள் கொடுப்பதையும் நிறுத்த வேண்டும் . இதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா ஏற்கனவே கையெழுத்துபோட்டு விட்டது; இனி இந்தியாவில் மாணியம் குறைக்கப்படும் நியாய விலைக்கடைகள் இழுத்து மூடப்படும்; தற்பொழுதாவது நம்புங்கள் உங்கள் அரசு உங்களை கொலை செய்ய விரும்புகிறது.


    இந்திய சுதந்திரம் அடைந்தது முதல் இன்று வரை இரண்டரை இலட்சம் விவசாயிகள் மனம் உடைந்தும் உணவின்றியும் இறந்துள்ளனர்; அதாவது இரண்டரை இலட்சம் குடும்பங்க்ள் அழிவை சந்தித்து உள்ளது; இதற்கு எல்லாம் மூலக்காரனத்தை நோக்கி பயணித்தால் அதன் மூலம் பசுமை புரட்சியும் வெண்மை புரட்சியும் என்பது விளங்கும்; பணமே செலவழிக்காமல் விவசாயம் செய்து வந்த விவசாயிகளை வங்கியிடம் கை ஏந்த வைத்தது பன்னாட்டு நிறுவங்களின் சதி. அதற்கு உதவியது இந்திய அரசின் பிரதமர்கள். 


    பசுமை புரட்சி என்ற பெயரில் மரபனு மாற்றபட்ட ஒட்டுரக நெல் ரகங்களையும் வேதியல் உரங்களையும் இந்தியாவிற்குள் நுழைய விட்டனர்;முதலில் குறைந்த விலைக்கு கொடுக்கபட்டவை பிற்காலத்தில் விலை உயர்ந்து பயிர் கடன் வாங்கும் நிலைக்கு சென்றது. வேதியல் உரங்களால் மண்ணும், வேதியல் உணவுகளால் மனிதனும் மலடானான்; வெண்மை புரட்சி , கலப்பின மாடுகளை அளித்து நாட்டு மாடுகளை அழித்தது; கலப்பின மாடுகளின் சாணம் மண்ணிற்கு உரம் அழிக்கவில்லை அதன் பால் மனிதனிக்கு நோய் அளித்தது;இது மருத்துவ வியாபாரம்; மீதி இருந்த ஒரு சில நாட்டு மாடுகளை அழிக்க சல்லிக்கட்டு தடை போடபட்டு நாம் போராடி மீட்டது எல்லாம் நினைவிருக்கும் என நம்புகிறேன். அவர்களில் சதி முடிய போவதில்லை. விவசாயிகள் தற்கொலை நிர்க்கபோவதில்லை. நாம் இயற்கைக்கு திரும்பும் வரை.

    இதற்கு இடையில் உயர் பண மதிப்பு இழப்பு வேறு. பணம் என்பது வெறும் காகிதத்திலிருந்து உருவாகிறது அதற்கு வட்டி வாங்குவது இரத்தவேறித்தனம்; அதை எதிர்க்காதது நமது முட்டாள் தனம்; பண மதிப்பு இழப்பு நடவடிக்கை கறுப்பு பணத்தை ஒழிக்க அல்ல; அனைவரையும் வங்கி கணக்கு ஆரம்பிக்க வைக்க; அதன் பின் Digital currency கொண்டு வர, அப்போ தானே உங்களுக்கு எல்லாவற்றிக்கும் கட்டணம் போட்டு உங்களை சாகடிக்க முடியும். இதுக்கு பின் நுடபமான பெரிய விடையம் உள்ளது இந்த குறுகிய நேரத்தில் உங்களுக்கு என்னால் புரையவைக்க முடியாது என்பதால் கடந்து செல்கிறேன்,  வணிகன் வங்கி நடுத்தும் போது வேறு எதை உங்களால் எதிர்பாக்க முடியும்.


    நெடுவாசல் நெடுநாள் போராட்டம் இன்னும் ஓய வில்லை. நாம் ஒவ்வொருவரும் மீத்தேனை நமது வீடுகளில் இயற்கையான முறையில் தயாரிக்கும் வரை இது என்றும் ஓயாது

    இது நடப்பது எல்லாம் விவசாயிகளை விவசாயத்தை விட்டு வெளியேற்றவே. ஏனெனில், பன்னாட்டு நிறுவங்கள் விவசாயம் செய்ய காத்திருக்கின்றன. அவர்களுக்காக வேலை செய்ய குறைந்த செலவில் பல அடிமைகள் இந்தியாவில் கிடைப்பார்கள்; நம்மை வேலை இல்லா பட்டதாரிகளாக்கியதே இதற்காக தான்.


    ஒரு வேலை நான் வேறு பிரதமரை, கட்சியை தேர்ந்தெடுத்தால் எனது வாழ்க்கை மாறிவிடுமா ? என்ற கேள்வியுடன் இருந்தேன்; வேறு ஒரு அரசை தேர்ந்தெடுத்தேன்; இவர்கள் தான் அந்த அரசுகளின் தவறுகளை எதிர்த்தார்கள்; ஆனால்

    தற்பொழுதும் எதுவும் மாறவில்லை; பழைய அரசு செய்தததையே இவர்களும் செய்தார்கள்; மீண்டும் எனது மண்ணையும் நிலத்தையும் நீரையும் நாசமாக்கும் திட்டங்கள் தொடர்ந்தன. நானும் எதிர்த்து நின்றேன் என்னால் முடிந்த வரை.

    மீண்டும் தேர்தல் , எனது மக்கள் மீண்டும் பழைய அரசுக்கு வாக்களித்தனர் ; ஆனால் எனக்கு தெரியும் எதுவும் மாறாது; நான் வாக்களிக்கவில்லை; ஒரு முடிவுக்கு வந்தேன் ; அந்த முடிவை நான் கூறினாள் என்னை தேச துரோகி என்பீர்கள். உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன் கிழக்கிந்திய கம்பேனியின் ஆட்சியில் பகத்சிங்கும் சுபாசும் தேச துரோகிகள் தான்.


    எனது அரசையும் பிரதமர்களையும் தங்கள் திட்டங்களுக்கு பயன்படுத்தி கொள்ளும் அளவுக்கு அந்த நிறுவனங்கள் அதிகாரம் வாய்ந்தவையா என வியந்தேன். ஆம் அந்த சதிகார நிறுவங்கள் வெறும் கிளை நிறுவங்கள் தான் அதன் அடிவேரை நான் கண்டபோது நான் அதிர்ந்து போனேன்; உலகில் பெரும் கார்ப்புரேட் நிறுவங்களின் தாய் நிறுவனத்தை நான் கண்ட போது எனக்கு எல்லாம் புரிந்தது ; அது க்ரோவ்ன் கார்ப்ரேசன் . 1947 க்கு முன் நம்மை ஆண்டு வந்த அதே அரசியின் நிறுவனம் அது.


    இன்னும் பல விடயங்கள் எனது தேடலில் கிடைத்தன. எல்லாம் அறிந்தால் உங்களை இன்று முதல் தூக்கம் தழுவாது. சுதந்திரத்தை சும்மா கொடுத்த போதே நாம் சிந்தித்திருக்க வேண்டும்; அதாவது தங்களுக்கு உண்மையிலையே அச்சுறுத்தலாக இருந்த பகத்சிங் சுபாசு போன்றோரை கொலை செய்த பிறகும் ஏன் சுதந்திரம் வழங்கினார்கள் என நாம் சிந்தித்திருக்க வேண்டும். இங்கே எதுவும் மாற வில்லை; தனது வேலைக்காரர்களை வைத்து இன்றும் இந்தியாவை அந்த அரசி தான் ஆண்டு வருகிறாள். இங்கே மட்டும் அல்ல; எல்லா நாடுகளுக்கும் இதே நிலை தான். நமக்கு நாம் அடிமையாய் இருப்பது தெரியவில்லை எனவே நாம் அவர்களை எதிர்த்து தற்பொழுது போராடுவதில்லை. அவர்கள் சிறந்த உளவியல் முறையில் நம்மை ஆளுகிறார்கள்.

    உங்களுக்கும் நெஞ்சம் பொறுக்கவில்லையா ?
    எல்லாமே நமக்கு எதிராக இருக்க நாம் என்ன தான் செய்வது எங்கிறீர்களா!
    நான் சொல்லுவதை முயன்று பாருங்கள் ; ஓடுவதை நிறுத்துங்கள். வாழ ஆரம்பியுங்கள்; அவர்கள் உங்கள் வீடுகளுக்குள் உங்களை வசியம் செய்கிறார்கள் அது தான் தொலைக்காட்சி அதை தொலைவில் எரியுங்கள்.
    உங்களுக்கு தேவை யானதை நீங்களே உருவாக்குங்கள் ; அவர்களின் வியாபாரம் அழிந்து போகும்.  அவர்களின் நிறுவனங்களுக்கு நாம் அடிமை வேலை செய்ய தேவை இல்லை. உங்கள் ஊரில் தயாரிப்பதை வாங்குங்கள் நீங்கள் தயாரிப்பதை கொடுங்கள். நீங்கள் பூலோக சொர்க்கத்தில் வாழ்வீர்கள்.


    நன்றி
    - யூதா அகரன்

    1 comment:

    Total Pageviews