• புதியவை

  பினீசியரும் சேட்டுகளும் Phoenician and Set / bania

  வாழ்க உறவே; நாம் இன்று பார்க்கவிருப்பது மேற்குலகிற்கு எழுத்துக்களையும் நகர நாகரிகத்தையும் வழங்கிய கடல் வணிகர் பெனிசியர் பற்றி....

  பினீசியர் பற்றி எனது பழைய காணொளியை முதலில் பார்த்துவிடுங்கள்.

    Serpent Goddess & Sons of Serpent - https://youtu.be/egYRuDY39RY

  பினீசியர் தங்களை பாம்பின் புதல்வர்கள் என்றும் சேட்டின் மக்கள் (Set/Seth) எனவும் கூறுகின்றனர். (sons of serpents, sons of set). மேற்குலகிற்கு நாகரிகத்தையும் கலைகளையையும் மொழியையும் கொடுத்தவர்கள்; பணத்தை உருவாக்கியவர்கள்; உயிர் எழுத்துக்களை மேற்குலகில் அறிமுகம் செய்தவர்கள்; மிகப்பெரிய கடல் வணிகர்கள்; சில ஆயிரம் ஆண்டுகள் கடலின் அரசர்களாய் இருந்தவர்கள்; பழுப்பு நிறத்தவர்.
  மேற்கண்டவாறு மேற்குலகு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

  பெனிசியர்

  உலகில் முதல் முதல் மனிதன் அதிக தூரம் பயணித்தது கடல் வழியாகத்தான்; சக்கரம் கண்டுபிடிக்கும் முன்னே கடல் பயணம் தொடங்கிவிட்டது; இன்றும் அன்றும் வணிகம் என்றால் கடல் வணிகம் தான் முதன்மையானது.

  நமது பகுதியிலும் பணியா என்ற ஒரு மக்கள் கூட்டம் உள்ளனர்; இவர்களும் பெரும் வணிகர்கள் என்பது நாம் அறியாத ஒன்று அல்ல; தற்பொழுது இந்திய நாடே அவர்கள் கையில் தான் உள்ளது; இந்த பணியா என்ற பெயர் வணிகா - வணிகம் என்ற தமிழ் சொல்லில் இருந்து வந்தது; அதோடு தமிழில் பணி என்பதற்கு பாம்பு என்ற பொருளும் உண்டு; இவர்களின் பட்டப் பெயர்களில் ஒன்று சேட்டு  (Set/Seth) என்பதாகும்.

  பணியா பட்டியல்


  Money என்ற ஆங்கிலச் சொல் pani என்ற ரிக் வேதத்தில் காணப்படும் சொல்லில் இருந்து வந்ததாக சமசுகிரத ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இது பெனிசியரை குறிக்க ரிக் வேதத்தில் பயன்படுத்தப்படும் சொல்.
  (சமசுகிருதம் கிபி 2 ம் நூற்றாண்டுக்கு முன் இல்லை என்பதையும்; அதனுடைய காவியங்களின் மூலம் தமிழ் என்பதையும் நினைவில் கொள்க)

  Pani=Vanik= Vanij= Pana= Money

  நாம் ஏற்கனவே பார்த்தது போல இதுவும் ஒரு தமிழ் சொல் தான்; பினீசியர் எழுத்துருக்கலும் தமிழி எழுத்துருவோடு ஒத்துப்போவதை வைத்து, பெனிசிய மொழி தமிழரின் வணிக தொடர்பால் ஏற்பட்ட கடல் வணிக மொழி என்பது ஆய்வாளர்களில் துணிவு; சிலர் பெனிசியர் தமிழரே என்றும் துணிகின்றனர்.

  இங்கே நான் புரிந்துகொள்வது, பணியாவும் பினீசியரும் ஒரே மூலத்தையோ அல்லது ஒன்றிலிருந்து வந்த மற்றொன்றாகவோ இருக்க வேண்டும்; கட்டாயம் இவர்களுக்கிடையே தொடர்பு உள்ளது என்பதற்கு மட்டும் மாற்று கருத்தில்லை.

  இப்பெரும் வணிகர்கள் தான் அரச குடும்பத்தின் அடுத்தகட்ட  நெருங்கிய மரபனுகொண்ட பணியாளர்கள்.

  அரச குடும்பம் ஒரு தேனிக்கூடு இயக்கவியலை பின்பற்றுகிறது

  மேலே கொடுக்கப்பட்டுள்ள காணொளியை பார்த்த பின் பதில் தாருங்கள்.
  பாம்பு யாரை குறிப்பது என்பதை அறிவோம்; இதில் பாம்புகளுக்கு நடுவில் இருப்பது யாரை குறிக்கிறது ?  பதில் தெரிந்தால் பின்னூட்டு இடலாம்.

  நன்றி.  No comments:

  Post a Comment

  Total Pageviews