• புதியவை

  [இலுமினாட்டி 45) உலக அரசியலும் தமிழனின் முட்டாள்தனமும்

  (இது ஜல்லிக்கட்டை பற்றிய பதிவு அல்ல)

  பன்னாட்டு மாட்டுத் தீவன நிறுவனங்களும், ரசாயன உரத் தயாரிப்பு நிறுவனங்களும், பன்னாட்டு பால் உற்பத்தி நிறுவனங்களும் இன்னும் பீட்டா போன்ற தன்னார்வ நிறுவனங்கள் என்ற போர்வையில் திரியும் நிறுவனங்களும் இப்போது தமிழகத்தை குறிவைத்துள்ளது.,
  ஜல்லிக்கட்டிற்கான தடை நான் மேற்சொன்ன பன்னாட்டு நிறுவனங்களின் கூட்டுச் சதி என்பது நம்மில் பலருக்கு தெரியும்.,

  இந்தியாவில் இருந்த நாட்டு மாடுகளில் 70% மாடுகள் அழிக்கப்பட்டாகி விட்டது., மீதம் இருக்கும் 30% மாடுகள் தமிழகத்தில் தான் உள்ளது.,  அவை ஜல்லிக்கட்டிற்காக வளர்க்கப்படும் நாட்டு மாடுகள்., இந்த நாட்டு மாடுகளை பராமரிப்பது அதிக சிரமம் இல்லாத வேலை., இவற்றுடன் இனவிருத்தியில் சேரும் பசுவின் பால் அளவில் குறைவாக இருந்தாலும் மனிதனுக்கு பயனளிக்கும் A2 வகையை சேர்ந்த பால்., அவற்றின் சாணம் இயற்கை விவசாயத்திற்கு உகந்த அதிக மகசூல் தரக்கூடிய இயற்கை உரம்.,

  இவ்வாறு பன்னாட்டு நிறுவனங்களுக்கு பல வகையிலும் எதிரியாக இருக்கும் நாட்டு மாடுகளை அழிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை அடைந்துவிட்டன பன்னாட்டு நிறுவனங்கள்.,

  ஜல்லிக்கட்டை தடை செய்து விட்டால் நாட்டு மாடுகள் அழிந்து விடும் என்று பலர் ஜல்லிகட்டிற்கு ஆதரவாக பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர்., ஆனாலும் நம் எல்லோருக்கும் தெரியும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது பணபலத்தால் ஜல்லிக்கட்டை முழுவதும் தடை செய்து விடுவார்கள்.,

  எனில் நாட்டு மாடுகளின் நிலை என்னவாகும்., ஜல்லிக்கட்டு என்பது காரியம்., நாட்டு மாடுகள் என்பது அதற்கான காரணம்., நாம் காரணத்தை விடுத்து காரியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது முறையா சகோதரர்களே.,

  ஒருவேளை ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டாலும், நாட்டு மாடுகளும் அது சார்ந்த விவசாயம், பால் உற்பத்தியும் தடைபடாமல் இருக்கும் படி பார்த்துக் கொள்வோம்.,

  ஜல்லிக்கட்டை பற்றிய பதிவுகளை விடுத்து நாட்டு மாடுகளை வாங்குவது, வளர்ப்பது பற்றி அதிகம் பகிர்வோம்., நாட்டின் பொருளாதார நலன் காப்போம்.,

  பி.கு.: பொங்கலுக்கு பிறகு நம்மில் யாரும் ஜல்லிக்கட்டைப் பற்றி நினைத்து கூட பார்க்க மாட்டோம் என்று நமக்கே தெரியும்., முடிந்த வரை நாட்டு மாடுகளை பற்றியாவது நினைப்போம்.,
  நன்றி......,
  -Dr.S.M.M.

  No comments:

  Post a Comment

  Total Pageviews