• புதியவை

    [மருத்துவம் 4]பாரம்பரிய உடலியல் - சுவை

    (இது ஒரு தொடர் பதிவு)

    மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
    தற்றது போற்றி யுணின்
                                     - வள்ளுவர்

    இந்க பதிவில் சுவைகளை எப்படி கண்டுபிடிப்பது என்பதை பற்றியும், ஒவ்வொரு சுவையும் உடல் சார்ந்தும், மனம் சார்ந்தும் என்ன என்ன பணிகளை செய்கிறது என்பதை பற்றியும் ஜீரணத்தில் சுவையின் பங்களிப்பு பற்றியும் விரிவாக பார்க்கலாம்.,


    இந்திய பாரம்பரிய மருத்துவம் மற்றும் உடலியலின் அடிப்படையில், உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் தங்களுக்கு தேவையானதை சுவையில்(உணவில்) இருந்தே பெற்றுக் கொள்கின்றன., எனவே தான் உணவின் தன்மை அறிந்து உண்பவனது உடலுக்கு மருந்து என்ற ஒன்று தேவைபடாது என வள்ளுவர் கூறுகிறார்.,

    உணவில் இருந்து பெறப்படும் சுவையைக் கொண்டே உடல் கட்டமைக்கப்படுகிறது என்றால் அது மிகையாகாது.,  மேலும் உடலில் உள்ள ஏழு தாதுக்களும் இந்த சுவைகளாலே உறுவாக்கப்படுகின்றன.,
    இந்த சுவைகள் ஆறாக வகை படுத்தபடுவது நாம் அறிந்த ஒன்றே.,

    அவை:
    i) இனிப்பு.,
    ii) புளிப்பு.,
    iii) உப்பு.,
    iv) காரம்.,
    v) துவர்ப்பு.,
    vi) கசப்பு.,

    இரண்டு வகையான சுவைகள் இருப்பதாக பாரம்பரிய மருத்துவம் சொல்கிறது.,

    a) நேரடிச் சுவை.,
    b) மறைமுகச் சுவை.,

    நாவால் உணரப்படும் சுவைகள் நேரடிச் சுவைகள் என்றும், தன்மைகளின் அடிப்படையில் உணரப்படும் சுவைகள் மறைமுகச் சுவை என்றும் அறியப்படுகிறது.,

    நாம் உண்ணும் ஒவ்வொரு பொருளும் என்ன சுவையை பெற்றிருக்கிறது என்பதை அறிந்து உண்டால் நமக்கு மருந்தே தேவையில்லை என்கிறார் வள்ளுவர்.,

    சுவையை கண்டுபிடிப்பது எப்படி? இந்த கேள்வியை என் ஆசிரியர் முதல் தடவை என்னிடம் கேட்டபோது "தின்று பார்த்து தான்" என்ற பதிலைத் தான் நானும் சொன்னேன்., ஆனால், இந்திய பாரம்பரிய மருத்துவம், ஒவ்வொரு சுவையும் அந்த பொருளின் நிறம் மற்றும் தன்மையைக் கொண்டு அடையாளப்படுத்துகிறது.,


    i) இனிப்பு:
    அறுசுவை உணவு பட்டியலில் இனிப்பே முதலிடம் பிடிக்கிறது., இனிப்பு உடலில் நெகிழ்வு தன்மையை ஏற்படுத்தும் பணியையும் இணைப்பு பணியையும் செய்கிறது., இனிப்பில் இருந்து உண்ணத் தொடங்குவது இரைப்பையில் நெகிழ்வு தன்மையை ஏற்படுத்தி அடுத்தடுத்த உணவுகளை உள்வாங்கும் திறனை இரைப்பைக்கு அளிக்கிறது.,

    மஞ்சள் நிறம் உடைய பொருட்கள்.,
    வழவழா-கொழகொழா என இருக்கும் பொருள்கள்.,
    நெகிழ்வோடு இருக்கும் பொருள்கள்.,
    சுவையற்ற தன்மையில் இருக்கும் பொருள்கள் இவை அனைத்தும் பிரதானமாக இனிப்பு சுவையை பெற்றிருக்கும்.,

    இனிப்பு சுவையின் ஆதிக்கத்தை பெற்றவர்கள் அனைவரிடமும் இனக்கமாக இருப்பார்கள்.,

    எ.கா.:
    நன்கு கனிந்த வாழைப்பழம் - வழவழா-கொழகொழா தன்மை மற்றும் நெகிழ்வுத் தன்மையை பெற்றிருப்பதால் இது இனிப்பு என அறியப்படுகிறது.,

    மஞ்சள் - இது மறைமுக இனிப்புச் சுவை(நாவில் இனிப்பு தெரியாது)., இதன் நிறம் மற்றும் இது இணைப்பு பணியை செய்வதால் இது இனிப்பு சுவையாக அறியப்படுகிறது.,

    அதிக மன அழுத்தம், தசைகளில் அதிக இருக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு உணவில் இனிப்பு சுவையை சற்று அதிகமாக சேர்த்து கொள்வது தீர்வாக அமையும்.,


    ii) புளிப்பு:
    உணவில் இரண்டாவதாக சேர்க்க வேண்டியச் சுவை புளிப்பு., இது உடலில் பெருக்கும் தன்மையையும், இன்னும் வேண்டும் என்ற எண்ணத்தை(ஆசையை) தூண்டும் பணியையும் செய்கிறது.,
    இது இரைப்பையில் இருக்கும் உணவை(இனிப்பை) பெருக்கவும், அடுத்தடுத்து உண்ண வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டவும் செய்கிறது.,

    வெளிறிய மஞ்சள் நிற பொருட்கள்.,
    பிசுபிசுப்பு தன்மை கொண்ட மற்றும் ஒட்டும் தன்மை கொண்ட பொருட்கள்.,
    இவை அனைத்தும் பிரதானமாக புளிப்பு சுவையை பெற்றிருக்கும்.,

    புளிப்பு இச்சையை தூண்டும் சுவை என்பதால் புளிப்பின் அம்சத்தை பெற்றவர்கள் அதிக ஆசைகள் உடையவர்களாகவும், போதும் என்ற மனம் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள்.,

    விரக்தியில் இருப்பவர்கள், தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்கள், இவர்களுக்கு உணவில் புளிப்பு சுவையை சற்று அதிகமாக கொடுப்பதால் அவர்களின் மனநிலை மாறும்.,


    iii) உப்பு:
    அடுத்ததாக எடுத்துக் கொள்ள வேண்டிய சுவை உப்பு., இது ஏற்கனவே இறைப்பையில் பெருக்கம் அடைந்து இணைந்திருக்கும் இனிப்பையும், புளிப்பையும் உடைக்கும் பணியை செய்கிறது.,

    வெள்ளை நிற பொருட்கள்.,
    நீர்(திரவத்) தன்மை கொண்ட பொருட்கள்.,
    இவை அனைத்தும் பிரதானமாக உப்பு சுவையை பெற்றிருக்கும்.,

    உப்பு உணர்ச்சியை தூண்டும் சுவை என்பதால்., இதன் அம்சத்தை பெற்றவர்கள் அதிக உணர்ச்சிவசப் படக்கூடியவர்களாக இருப்பார்கள்.,

    (சரும) உணர்ச்சியற்று, ரோசமற்று இருப்பவர்களுக்கு உப்புச் சுவை மருந்தாக அமையும்.,


    iv) காரம்:
    அடுத்தச் சுவை காரம்., இது இரைப்பையில் உடைக்கப்பட்டு இருக்கும் உணவை கரைக்கும் பணியை செய்கிறது.,

    சிகப்பு நிற பொருட்கள்.,
    உடையும்(உடைத்தால் சப்தம் வரும்), நொருங்கும் பொருட்கள்.,
    இவை அனைத்தும் பிரதானமாக காரச் சுவையை பெற்றிருக்கும்.,

    காரம் நெருப்பின் அம்சம் என்பதால்., இதை பெற்றிருக்கும் மனிதர்கள் (அதிக) கோபம் உடையவர்களாக இருப்பார்கள்.,

    கொழுப்பின் காரணமாய் உடல் பெருத்து இருப்பவர்கள் உணவில் மறைமுக காரத்தை அதிகமாக சேர்த்துக் கொண்டால் கொழுப்பு கரையும்.,


    v) துவர்ப்பு:
    அடுத்ததாக துவர்ப்பு ., இது இரைப்பையில் கைரந்த நிலையில் இருக்கும் உணவை இருக்கி ஒருங்கிணைக்கும் பணியை செய்கிறது.,

    அரக்கு நிற பொருட்கள்.,
    கரைபடியும் தன்மை கொண்ட பொருட்கள்.,
    இவை அனைத்தும் பிரதானமாக துவர்ப்பு சுவையை பெற்றிருக்கும்.,

    இதன் பிரதான பண்பு இருக்கம் என்பதால் இதன் அம்சத்தை பெற்றவர்கள் இருக்கமான வைராக்கியம் கொண்டவர்களாக இருப்பார்கள்.,

    இருக்க மற்ற தொழதொழ வென இருக்கும் தசை பிரச்சினைகளுக்கு துவர்ப்பு நல்ல தீர்வாக அமையும்., மேலும் உறுப்புகள் இடமாற்றம்(குடலிறக்கம்) சம்மந்தமான பிரச்சனைகள் வாராமல் இருக்க துவர்ப்பு உணவில் அவசியம் இருக்க வேண்டும்.,


    vi) கசப்பு:
    உணவில் கடைசியாக (கட்டாயம்) எடுத்துக் கொள்ள வேண்டிய சுவை கசப்பு., இது உயிர் சுவை என்று அடையாளப்படுத்துகிறது.,

    கசப்பு சுவை இரு வகையாக பிரிக்கப்படுகிறது.,
    a) உயிர் கசப்பு.,
    b) பிணக் கசப்பு.,

    அதிக சிரமம் இல்லாமல் ஜீரணம் ஆகக்கூடிய கசப்பு உயிர் கசப்பு என்றும் அதிக சிரமத்திற்கு பிறகு ஜீரணம் ஆகும் கசப்பு பிணக் கசப்பு என்றும் அறியப்படுகிறது.,

    கசப்பு இரைப்பையில் இருக்கம் பெற்றிருக்கும் உணவில் உள்ள சத்துக்களையும், கழிவுகளையும் தனிதனியே பிரித்து., அததை அதனுடைய இடத்திற்கு அனுப்பும் பணியை செய்கிறது.,

    உயிர் கசப்பின் அம்சத்தை பெற்றவர்கள் எல்லா வகையிலும் ஆரோக்கியமான உடல் அமைப்பையும், ஆரோக்கியமான மனதையும் பெற்றிப்பார்.,

    உயிர் கசப்பு 90 சதவீத நோய்களுக்கு மருந்தாக அமையும்.,

    நாம் உண்ணும் உணவில் அனைத்து சுவைகளும் கட்டாயம் இருக்க வேண்டும் இல்லையேல் அது ஜீரணம் முழுமையடையாமல் போய் நேய் ஏற்பட காரணமாய் அமையும்.,

    உதாரணமாக,  நாம் உணவில் முழுமையாக உப்புச் சுவையை தவிர்த்து விட்டோம் எனில்., உணவு சரிவர உடைக்கப் படாமல் கழிவாக மலக்குடலுக்கு சென்றுவிடும்.,

    எனவே எதை உண்கிறோம் என்பதை அறிந்து அறுசுவையையும் ருசித்து உண்டால்
    மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு................,
    - தொடரும்.......,

    1 comment:

    Total Pageviews