• புதியவை

    இந்த உலகத்தில் முதலில் படைக்கப்பட்டது பெண்ணா? ஆணா?

    இந்த உலகத்தில் முதலில் படைக்கப்பட்டது பெண்ணா? ஆணா?
    ......................................................................
    விருத்திரன் சே



    இந்த உலகத்தில் உள்ள அனைத்து வேதங்களிலும் முதலில் ஆண் படைக்கப்பட்டான்.ஆணுக்காக பெண் படைக்கப்பட்டாள் என்று கூறி இருக்கிறது...ஏனெனில் வேதங்கள் அனைத்தும் ஆண்களால் எழுதப்பட்டது...
    ஆண்களின் உடல் ஏதோ ஒன்றில் பொருத்தப்படுவதற்காக உருவாக்கப்பட்ட மேல்புற வடிவமைப்பை கொண்டது...
    முதலில் ஒன்று படைக்கப்பட்டு அதில் பொருத்தப்படுவதற்கான அமைப்பு தான் ஆண் உடல்...
    மேலும் ஆணின் அடிப்படை குணம் மூர்க்க குணம்...மூர்க்க குணம் பாதுகாப்பு தன்மையை குறிப்பது...
    #ஆண்டுகொள்ளுதல் இந்த வார்த்தையை அனைவரும் தவறாக புரிந்து கொண்டனர்...ஆண்டு என்பது பெண் - பெண்டு என்பதின் எதிர்மறை சொல்...
    மாதம் என்பது பெண்ணை குறிக்கும் சொல் மேலும் மாதம் 30 நாட்கள் என்பது பெண்ணின் உடற்சுழச்சியை குறிக்க கூடியது.நிலவு நீச்சமாகும் அந்த 3 நாட்கள் பெண்ணின் மாதவிடாய்யை அப்படியே ஒத்துவருவதால் தான் பெண்ணின் பெயரை அப்படி குறித்தனர்.
    இந்த மாதத்தை 6 ன் பெருக்கத்தை கொண்ட ( ஆறு என்பது ஆண்யை குறிக்கு சொல்) 12 ஆக பிரித்து வகுத்திருக்கின்றனர்...
    ஆண்டு என்பது தான் பின்பு ஆட்சி என்று ஆனது...
    ஆண் பெண்ணை பாதுகாப்பதற்காக படைக்கப்பட்டான்...பெண் உயிர் பெருக்கத்திற்காக படைக்கப்பட்டாள்...
    இதை தான் நம் மக்கள் மண்ணை பெண் என்று கூறினர்...
    ஒரு சிறு எ:கா :-
    மண்னை ஒத்தது பெண் ...
    மண்ணில் ஏறுபூண்டு விதை விதைத்து ( இது அப்படியே உறவு கொள்ளும் வார்த்தைகளை ஒத்தது)
    அதன்பின்பு தான் #வேளாண்மை ( வேள் ஆண்மை) செய்து இந்த இடத்தில் நாம் அதிகார திமிருடன் ஆளவில்லை மற்ற உயிர்களிடம் இருந்து பெண்பாலை ஒத்த மண்ணை காத்துநிற்கிறோம்.அதை அதனை ஒத்த உயிர்களை விளையவைக்கிறது...
    இந்த இடத்தில் ஆண்மை என்பது மிகத்தெளிவாக பாதுகாத்தலை குறிக்கும்.
    எந்த சமூகத்தில் பெண்களை கண்ணும் கருத்துமாக பாதுகாக்கிறார்களோ அந்த சமூகத்திற்கு வளர்ச்சியே தவிர அழிவு இல்லை.இது ஒவ்வொரு வீட்டிற்கும் பொருந்தும் உங்கள் வீட்டில் உள்ள பெண்களை பாதுகாத்துகொள்ளுங்கள் அடிமைப்படுத்தாதீர்கள்...அது நிலத்தில் விதைத்தவனே அதை அறுத்தெறிவதற்கு ஒத்தது...
    அப்படி நடந்தால் நிலம் கதறும் இயற்கை உங்களுக்கான அனைத்தையும் நிறுத்தும்.இது தான் தமிழ்சமூகத்தில் பெண்பாவம் பொல்லாது என கூறினர்.பெண்களை கடவுளாக கொண்டாடினர்.ஆண் கடவுள்கள் அனைவரும் காவல்தெய்வங்களாக இப்பதை நோக்கவும்.
    இந்த நுட்பங்களை கணித்தவர்கள் சித்தர்கள் இல்லை.#பழங்குடிகள்
    உங்கள் எதிரி எதற்காக பெண்களுக்கு எதிராக பல செயல்களை தூண்டிவிடுகிறான் என நோக்குங்கள்.பெண்களுக்கு அதை புரியவையுங்கள்.கற்பு முக்கியம் என புரியவையுங்கள்.வற்புறுத்தாதீர்கள்....
    பெண்ணே முதல் படைப்பு

    - விருத்திரன்

    1 comment:

    Total Pageviews