• புதியவை

    ஐம்பெரும் காப்பியங்கள் தமிழர் வரலாறா ? செட்டிகளின் வரலாறா ?

    வாழ்க உறவே ! தமிழில் நமக்கு கிடைத்துள்ள பெரும் காப்பியங்கள் ஐந்து; சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி. இந்நூல்கள் தமிழர்கள் அனைவரின் வாழ்க்கை முறையையும் எடுத்துகூறுவதாக உள்ளதா ? என்பதே இன்றைய ஆய்வு.

     பொதுவாகவே வரலாற்றில் படிக்கும் போது அரசனின் கதையும் மேட்டுகுடி மக்களின் கதையுமே வரலாறுகளாக அல்லது இலக்கியங்களாக தொகுக்கப்பட்டு எழுதப்பட்டிருக்கும்.

    இயற்கையோடு கிராமத்தில் வாழ்ந்த யாரும் தங்களில் கருத்துக்கள் நிலைபெறவோ அல்லது ஒரு வீரனின் புகழ் பரப்பவோ அதை எழுதி ஆவணப்படுத்துவத்தில்லை. இக்கருத்துகளும் கதைகளும் ஊரில் மூத்தவர் அல்லது குடும்பத்தில் மூத்தவர் வழியாகவே புதிய தலைமுறையினருக்கு வழங்கப்பட்டன; அவை அந்த மூத்தவரின் தற்காலத்து அனுபவங்களோடு கலந்து கடத்தப்பட்டன.

    இங்கே எந்த ஒன்றும் ஆவணப்படவில்லை. தேவையானவை மட்டுமே தேவையான வகையில் கடத்தப்பட்டன.

    பதிவுக்கு திரும்புவோம்;

    சிலப்பதிகாரம் சேர நாட்டவரான இளங்கோ அடிகளால், கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டது. சோழ நாட்டின் தலை நகரமாக விளங்கிய பூம்புகாரைச் சேர்ந்த கோவலன் என்னும் வணிகனதும், அவனது மனைவியாகிய கண்ணகியினதும் கதையைக் கூறுவதே இக் காப்பியமாகும். கோவலனுடன் தொடர்பு கொள்கின்ற நடனமாதான மாதவி இன்னொரு முக்கிய கதாபாத்திரம் ஆகும்.

    சிலப்பதிகாரத்தில் ஒரு வணிகப்பெண் முதலிடம் பெறுகிறாள்; கண்ணகி ஒரு நகரத்தார் / நாட்டுகோட்டை செட்டியார் பெண். கோவலனும் அவ்வாறே. சிலப்பதிகாரத்தில் இன்னும் பல செட்டி பெயர்கள் இடம் பெருகின்றன.

    மணிமேகலை  நாயகி மணிமேகலை, சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகளாவாள். கோவலன் மற்றும் கண்ணகியின் சோக மறைவிற்கு பிறகு, மாதவி பொது வாழ்விலிருந்தும் கலைப் பணியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டாள். தான் கடந்த காலத்தில் வாழ்ந்த முறையையும் நினைவுகளையும் மாற்ற நினைத்த மாதவி, அவற்றின் சுவடுகளும் உலக சுகங்களும் இன்றி மணிமேகலையை வளர்க்க எண்ணி புத்த சமய மடம் ஒன்றில் அவளைச் சேர்த்து வளர்த்தாள்.

    அவள் வாழ்ந்து வந்த நாட்டு இளவரசன் மணிமேகலையின் மேல் காதல் கொள்ளவே, அவனிடமிருந்து விடுபட்டு மணிபல்லவத் தீவுக்குச் சென்று புத்த சமயத் துறவியானாள். அங்கு அவளுக்கு பசிப்பிணி போக்கும் 'அட்சய பாத்திரம்' கிடைத்தது. அன்று முதல் மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள்.

    இதுவும் செட்டிமகன் கோவலனின் மகள் கதையே. ஒரு இடத்தில் மணிமேகலை தன்னை கண்ணகியின் மகளாகவும் கூறிகொள்கிறாள்; மணிப்பவல்லவத்தீவு / நாகநாட்டு இளவரசி பீலிவளை என்னும் நகரத்தார் பெண்ணை சோழ அரசன் கூடியகதையும் , பின் அவளுக்கு பிறந்த மகனுக்கு சோழன் நிலம் கொடுத்து ஆட்சியில் அமர வைத்தது காணப்படுகிறது.

    மணிமேகலை கடல் வணிகரின் தெய்வம்

    குண்டலகேசி என்னும் நூல் ஒரு பௌத்தம் சார்ந்த நூலாகும். தன்னை கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டுப் பௌத்த துறவியாகி அச் சமயத்தின் பெருமையைப் பரப்புவதில் ஈடுபட்ட குண்டலகேசி என்னும் வணிகர் குலப் பெண்ணொருத்தியின் கதையே இக் காப்பியத்தின் கருப்பொருளாகும்.

    வணிகர் குலப்பெண் எனபது நாம் குறித்துகொள்ள வேண்டியதாகும். வணிகமணி என்பவரின் மகள்.


    வளையாபதி ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இது சமண சமயம் சார்ந்த ஒரு நூல். இதனை எழுதியவர் யாரென்பதும் அறியப்படவில்லை. இந்நூல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கவில்லை. .
    \சிலரின் கருத்துப்படி இது நாராயண செட்டியின் கதை. 



    சீவக சிந்தாமணி என்பது சங்க காலத்துக்குப் பின்னர் தோன்றிய ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. சோழர் காலத்தில் எழுதப்பட்டது. மன்னனுக்கு மகனாக, அரசியின் வயிற்றில் உருவானவன் சீவகன். எனினும் விதி வசத்தால் சுடுகாட்டில் பிறக்கிறான். பின்னர் வணிகன் ஒருவனின் வீட்டில் வளர்கிறான். அச்சணந்தி என்னும் ஆசானிடம் கல்வி பயின்ற இவன் சிறந்த தோற்றப்பொலிவு கொண்டவன், மிகுந்த அறிவு நிரம்பியவன், பல்வேறு கலைகளிலும் வல்லவன், சிறந்த வீரன். இவன் எட்டு மங்கையரை மணந்து கொள்கிறான். இதனால் இந்நூலுக்கு மணநூல் என்ற சிறப்புப்பெயரும் உண்டு. இவ்வாறு பல மணம் புரிந்தவன் ஆனாலும், இவன் ஒரு காமுகனாக அன்றி சிறந்த மன அடக்கம் கொண்டவனாகவே சித்தரிக்கப்படுகிறான். இவ்வாறு பல பெண்களை மணம்புரிந்ததன் மூலம், பணபலத்தையும், படைபலத்தையும் பெருக்கிக் கொண்டு அரசபதவியை அடைகிறான். 30 ஆண்டுகள் நீதியுடன் ஆட்சி செய்த சீவகன், ஆட்சிப் பொறுப்பை மகனிடம் அளித்துவிட்டுத் துறவறம் பூண்டு முத்தி பெறுகிறான்.

    இந்நூலின் தலைவனும் அரசனின் மகனாக இருந்தாலும் செட்டியின் வளர்ப்புமகன்.


    நாம் தற்பொழுது ஐம்பெரும் காப்பியங்களில் கதை சுருக்கத்தை அறிந்து கொண்டோம்; இங்கே வியப்பேது எனில் , அரசனுடைய கதை அல்ல இங்கே கொடுக்கப்பட்டிருப்பவை வணிகரின் கதைகள்; அதுவும் செட்டிகளி, நாட்டுகோட்டை செட்டிகளின் கதைகள்.

    தமிழ் பெருங்காப்பியங்களில் அரசனுக்கு இல்லாத இடம் செட்டிகளுக்கா ? ஆம் நாட்டினை இப்போதும் அப்போது ஆளுவது அரசர்கள் அல்ல; வணிகர்கள்; ஒரே இயக்கவியலே உலகை ஆளும் அரசி குடும்பத்தால் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

    சோழர்களுக்கு முடிசூட்டியவர்களும் நகரத்தாரே

    எல்லாமே அணிகலன் விளம்பரம் போல இருக்கிறது பாருங்களேன்
    சிலப்பதிகாரம் - சிலம்பு என்பது மகளிர் அணியும் காலணி
    மணிமேகலை - ஆடை நழுவாமலிருக்க மகளிர் இடுப்பில் அணியும் அணி
    குண்டலகேசி - குண்டலம் என்பது மகளிர் அணியும் காதுவளையம்.
    வளையாபதி - வளையல் அணிந்த பெண் வளையாபதி
    சீவகசிந்தாமணி - சிந்தாமணி என்பது அரசன் முடியில் (கிரீடத்தில்) பதிக்கப்படும் மணிக்கல்.

    வாய்ப்பிருந்தால் சிலப்பதிகாரம் பற்றி விரிவாக பின் காண்போம். அது ஒரு வணிக பெண் அரசனை கதை முடித்த கதை

    நன்றி.

    - யூதா அகரன்
    தொடர்புடைய பதிவுகள்


    உண்மையோ ஆராய்கவின் வளர்ச்சியில் பங்களிக்க - Click 
    மின்னூல்களை பதிவிறக்க - - Click

    2 comments:

    1. இப்போ என்ன சொல்ல வாரிங்க செட்டியார் பற்றி

      ReplyDelete
    2. How to Deposit at a Casino Site with an Odds
      This page will offer information about what you can deposit into a Casino Site. A no deposit bonus is luckyclub a free bonus that is one of the first things you need to

      ReplyDelete

    Total Pageviews